சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திவ்யஞன் அதிகாரமளித்தல்- 2017 விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்

Posted On: 03 DEC 2017 5:43PM by PIB Chennai

சர்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தினை முன்னிட்டு  மாற்றுத்திறனாளர்களின் அதிகாரம் அளித்தல்-2017க்கான தேசிய விருதுகளை (திவ்யஞன்)  குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த்  மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் செயல்படும் மத்திய மாற்றுத்திளனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை ஏற்பாடு செய்திருந்த விழாவில் விருதாளர்களுக்கு வழங்கினார்.

இந்த விழாவில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வார்சந்த் கெலாட், அத்துறையின் இணை அமைச்சர்கள் கிருஷ்ணன் பால் குஜ்ஜார், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் பங்கேற்றனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்து உதவும் தலைசிறந்த  தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மாநில, மாவட்ட அளவில் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தேசிய விருதுகள் 14 முக்கிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இதில் 13 பிரிவுகளில் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் 984 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பரிசீலனை  குழு விதிகளுக்கு உள்பட்டு ஆய்வு செய்து விருதாளர்களை தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்தது.  அந்த தேசிய குழு நவம்பர் 10 மற்றும் 16ம் தேதிகளில் கூடி விவாதித்து  52 பேர் மற்றும் நிறுவனங்களை விருதுக்கு பரிந்துரைத்தது.

இந்த விருது வழங்கும் விழாவில் பேசிய குடியரசு தலைவர், நாட்டின் அனைத்து குடிமக்களின் திறமையை உணர்வதை சார்ந்தே எதிர்கால இந்தியா இருக்கிறது என்றார். இந்த இலக்கினை எட்ட உணர்வுபூர்வ மற்றும் மதநல்லிணக்க அடிப்படையிலான சமூகத்தை உருவாக்க வேண்டும். அந்த சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரும் அதிகாரம் பெற்றவராக இருப்பதை உணர வேண்டும்., அப்படி இல்லாதபட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலியை  மற்றவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். என்றார்.

நமது அரசியல் சாசனம் சமத்துவம், சுதந்திரம், நீதி, மற்றும் கண்ணியத்தை மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவருக்கும் வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேசிய நீரோட்டத்தில் அங்கம் வகித்து அதிகாரங்களை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சட்டங்களை கொண்டுவந்துள்ளது.  எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் அவர்களின் அறிவு மற்றும் தைரியத்தில்  தங்கள் உடல்திறன் ஒரு குறையாக மதிப்பிடப்பட்டுவிடக்கூடாது.

மாற்றுத்திறனாளிகள் விருதுபெற்றவர்களை வாழ்த்திய குடியரசு தலைவர், விருது பெற்றவர்களை பார்த்து பிற மாற்றுத்திறனாளிகள் உந்தப்பட்டு புதிய இலக்கிற்கு செல்வதற்கு இந்த விருதுகள் ஊக்கமாக அமையும் என்று குடியரசு தலைவர் கூறினார். இந்திய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறிய குடியரசு தலைவர், அதில் மாற்றுத்திறனாளர்களையும் ஒரு அங்கமாக சேர்த்து அங்கீகரிப்பார்கள் என்றும் கூறினார்.

இந்த விழாவில் பேசிய, மத்திய அமைச்சர் தல்வார் சந்த் கெலாட்,  இந்தியா கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்திருப்பதாகவும் கூறினார். மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கான உபகரணங்கள் வழங்குவதற்காக 8589 (ஏ.டி.ஐ.பி.,) முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 9 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பாட்டு கருவிகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதே கால கட்டத்தில், 4 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதே கால கட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் கருவிகள் வழங்குதல் அளவும் அதிகரித்துள்ளன என்று கூறிய அமைச்சர் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் திறமைசாலிகள் என்றார். விளையாட்டுத்துறையில், அவர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.  மேலும் மாற்றுத்திளனாளிகளின் நலனுக்காக அரசு செய்துவரும் திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்யவும், விளம்பரம் செய்யவும் மாற்றுத்திறனாளிகள் உதவிகரமாக உள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடியின் திறமையான வழிகாட்டல்படி, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல், மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் அளித்தல் துறை உலகெங்கும் பிரசித்தி பெற்றுள்ளது.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, 2 கோடியே 68 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உடல்திறன்குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களின் குறைகளை போக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. இதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சகம், தனிகவனம் செலுத்தி உரிய உதவிகளை அளித்துள்ளது. இதற்காக 2012ம் ஆண்டு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு பல்வேறு புதிய திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டு சேர்க்கப்பட்டன. அதே நேரம்,  மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடும் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு அவை தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகின்றன. முக்கியமான இரண்டு திட்டங்களின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பரிசீலிக்கப்பட்டு நிதி உதவிகள் ஆன்லைன் மூலமே வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் 1969ம் ஆண்டில் இருந்து வழங்கப்படுவது வரலாறு. அப்போது இரண்டு பிரிவுகளில் மட்டும் அதாவது பொதுகவன ஈர்ப்பை எட்டும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி ஊக்குவித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நோக்கில், விருதுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளர்களின் அதிகாரம் அளித்தல் விருதுகள் வழங்குவது 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 14 வகையிலான பல்வேறு பிரிவுகளில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட 58 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, விருது வழங்குவதற்கு உரியவர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரம் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி கடைசிநாளாக கொண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இருப்பினும் விருதாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 984 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை 4 பரிசீலனை குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு தேசிய விருதுக்குழு  நவம்பர் 10 மற்றும் 16ம் தேதிகளில் கூடி 52  தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த விருதாளர்களை தேர்வு செய்தது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழும், பதக்கம், அல்லது சில பிரிவினருக்கு கேடயமும் மொத்த பரிசுத்தொகையாக 43 லட்சத்து 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.



(Release ID: 1512505) Visitor Counter : 348


Read this release in: English