குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பாகுபாடுபார்த்தல், களங்கப்படுத்துதல் ஆகிவற்றை நாகரீக சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது .- குடியரசு துணைத்தலைவர்
தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் சகாஜ்ய திட்டத்தை தொடங்கிவைத்தார்
Posted On:
03 DEC 2017 5:36PM by PIB Chennai
பாகுபாடுபார்ப்பதையும், களங்கம் கற்பிப்பதையும் நாகரீக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடன் வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையநாயுடு, கூறினார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் சகாஜ்ய திட்டத்தினை தொடங்கிவைத்து பேசிய அவர் இதை தெரிவித்தார். இந்த விழாவில் அசாம் ஆளுநர் ஜகதிஷ் முக்கி, அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.
ஐக்கியநாடுகள் கருத்துப்படி, ஊனம் என்ற நிலை அல்லது குறிப்பிடத்தக்க செயல்பாட்டு குறைபாடு உடையவர்கள் சமூகத்தில் மற்றவர்களுக்கு நிகரான வாழ்க்கைக்கு உரியவர்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறியிருப்பதாக தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், குறைபாடு என்பது உடல், மன, அறிவு, மூளைசார்ந்த வளர்ச்சி குறைபாடு அல்லது நோய்பாதிப்பால் ஏற்படும் குறைகளை கொண்டதாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளை அனுதாபத்துடன் பார்ப்பதை கைவிட்டு, சமமான உணர்வுடன் பார்க்கவேண்டும் என்று கூறிய அவர், மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்படுவதை விரும்பவில்லை, அதேநேரத்தில் தங்களுக்குரிய மாற்றுத்திறனாளிக்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள் என்றார்.
அசாம் மாநிலத்தில் தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் சகாஜ்ய அச்னி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சிகிச்சை உதவியாக ஒருமுறை மட்டும் 5 ஆயிரம் ரூபாயை மாநில அரசு வழங்குகிறது என்று கூறிய துணை குடியரசு தலைவர், இந்த திட்டத்திற்காக 250 கோடி ருபயை ஒதுக்கியுள்ளது என்றார். இத்திட்டடத்தின் கீழ் மொத்தம் 4 லட்சத்து 50ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயன் அடைகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அசாம் ஊழியர்களுக்கான பிரணாம் 2017 என்ற சட்டத்தினை மாநில அரசு கொண்டுவந்துள்ளதை அறிந்து தாம் மகிழ்ச்சி கொள்வதாகவும் நாயுடு கூறினார். . இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசு ஊழியரும் தங்களுடைய சம்பளத்தில் 10 சதவீதத்தினை தங்கள் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய பராமரிப்புக்கும் வழங்கவேண்டும் - இந்த சட்டத்தினை கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார். பெருகிவரும் முதியோரின் நலன் கருதி அசாம் அரசு இந்த சட்டத்தினை கொண்டுவந்துள்ளது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே இந்திய நாட்டில் யாரையும் பாகுபடுத்தி பார்க்காமல் அனைவரையும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய புதிய இந்திய சமுதாயத்தினை உருவாக்க இந்தியமக்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வெங்கையநாயுடு கூறினார். அதுபோல அனைத்து இந்தியர்களும் பொருளாதார வளங்களை சமத்துவத்துடன் பெறவேண்டும் என்றும் அவர் கூறினார்.
/,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,/
(Release ID: 1512503)