பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேஷன் சகாயம்

Posted On: 10 DEC 2017 5:23PM by PIB Chennai

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுகளில்  டிசம்பர் 10, 2017 அன்று வரை, 11வது நாளாக தென்பிராந்திய கப்பல் படையினர் ஆபரேஷன் சகாயம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 9 கடற்படை கப்பல்கள் மற்றும் கைவசம் உள்ள அனைத்து விமானங்களும் சேர்ந்து காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. நீண்ட தூரம் பயணிக்கும் கப்பல்களும், உளவு பார்க்கப் பயன்படும் பி81 ரக விமானங்களும் மாலத்தீவுப் பகுதிகளில் தேடி வருகின்றன. மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், மாலத்தீவு பகுதிகளில் சில படகுகள் காணப்பட்டதாக தெரிவித்தனர்அதனால் மாலத்தீவு பகுதிகளில் பறப்பதற்கும், அதிவேக ரேடியோ அலைகள் பயன்படுத்துவதற்கும் தூதரகத்தின் மூலம் அதிவேக அனுமதி பெறப்பட்டது. ஆனால் மாலத்தீவைச் சேர்ந்த மக்கள், எந்த ஒரு மீனவரும் கரை ஒதுங்கவில்லை என தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

நான்கு மீனவர்கள் மற்றும் வட்ட ஆட்சியர் திரு.மோகன்ராஜ் ஆகியோருடன் .என்.எஸ். சுஜாதா எனப்படும் குளிர்சாதன பெட்டி அடங்கிய கப்பல் டிசம்பர் 10, 2017 அன்று விளிஞ்சியம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீனவர்கள் முழு திருப்தி அடையும் வரையிலும் இந்தத் தேடுதல் தொடரும்.

வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபடும் .என்.எஸ்.சுபத்ரா கப்பல், லட்சத்தீவு பகுதிகளில் 90 மைல் தூரத்தில் வடகிழக்கில் உள்ள பித்ரா தீவுகளில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மில்க்யாஸ், ஃபெலக்ஸியா எனப்படும் இரண்டு மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மீனவர்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கு 1500 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல், மேலும் இரண்டு படகுகள் கவிழ்ந்த நிலையில் இருந்ததைக் கண்டுபிடித்தது. அன்னை மற்றும் ஏவிஎம் - இபி துரை எனப்படும் அந்த படகுகளில் எந்த மீனவரும் காணப்படவில்லை. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவரட்டி தீவுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் (ஆர்..) நிலையம் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை என்பதால், கடற்படை மூலம் 70 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ஓகி புயல் பேரழிவுக்குப் பிறகு தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு, மினிகாய் தீவுகளில் நான்கு லட்சம் மைல் சுற்றளவுக்கு இந்திய கடற்படை தேடுதல் நடத்தி, அத்தியாவசிய தேவைகளைச் செய்துகொடுத்துள்ளது.



(Release ID: 1512496) Visitor Counter : 131


Read this release in: English , English