பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஐபிபிஐ) குறைதீர் மற்றும் புகார்கள் கையாள்வதற்கான ஒழுங்குமுறைகள் அறிவிக்கையை வெளியிட்டது

Posted On: 10 DEC 2017 5:20PM by PIB Chennai

இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஐபிபிஐ) அறிவித்துள்ள ஒழுங்குமுறைகள் அறிவிக்கையை (குறைதீர் மற்றும் புகார் கையாளும் நடவடிக்கை) டிசம்பர் 7-ம் தேதியன்று இந்திய அரசிதழில் வெளியிட்டது. இந்த விதிமுறைகளின்படி, பங்குதாரர், கடனாளி, கடன் கொடுத்தவர், உரிமை கோருபவர், சேவை வழங்குநர், திவால் தீர்மான விண்ணப்பதாரர் அல்லது திவால் தீர்மானத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் நபர், கலைப்பவர், தானே முன்வந்து கலைப்பவர் அல்லது திவால் நடவடிக்கை நிறுவனம் போன்றவை, திவால் மற்றும் வாராக்கடன் சட்டம் 2016 மூலம், சேவையாளர், திவால் தொழில்முறை நிறுவனம், திவால்  தொழில்முறையாளர்கள் மீது குறை தீர் அல்லது புகார் மனு தெரிவிக்க முடியும். ஐபிபி மூலம் மேற்கொள்ளப்படும் புகார் அல்லது குறைதீர் மனு மீதான நடவடிக்கை வெளிப்படையாக இருப்பதுடன், முறைகேடாக சேவை வழங்குநரை தண்டிக்குமே தவிர, நேர்மையாக சேவை வழங்குநரை தொந்தரவு செய்யாது.

ஒரு பங்குதாரர், சேவை வழங்குநர் நடத்தை குறித்த விபரங்களைக் குறிப்பிட்டு, எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டது என்று குறைகளைப் பதிவு செய்யமுடியும். பணம் சம்பந்தமான குறையா அல்லது சேவை வழங்குநரால் எப்படிப்பட்ட துன்பத்திற்கு ஆளானார், குறை தீர்ப்பதற்கு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் எப்படி குறை தீர்க்கப்பட்டிருக்கலாம் போன்ற அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட படிவம் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் (ரூ.2,500) கட்டணம் செலுத்தி புகார் பதிவு செய்ய முடியும். ஐபிபிஐ விதித்திருக்கும் நெறிகளின் கீழ் எந்த வகையில் சேவை வழங்குநர் அல்லது அவருடைய இணை நபர்கள் விதிகளை மீறி செயல்பட்டனர் என்பதை தேதி, இடம் மற்றும் முழுமையான தகவல்களுடன் தெரிவிக்க வேண்டும. குற்றம் சுமத்துவதற்கு தகுந்த ஆதாரங்களும் குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்பட வேண்டும். இந்த புகார் மனு உள்நோக்கம் கொண்டதல்ல அல்லது தவறாக அளிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், கட்டணம் திருப்பித் தரப்படும்.

புகார் பதிவு செய்வதற்குத் தகுந்தது என  ஐபிபிஐ கருதும் பட்சத்தில், துணை ஒழுங்குமுறை (3) சட்டம் 3-ன் படி, ஆய்வுக்கு உத்தரவிடலாம். துணை ஒழுங்குமுறை (2) சட்டம் 7-ன் படி, காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடியும். துணை ஒழுங்குமுறை (2) சட்டம் 11-ன் படி திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஆய்வு மற்றும் சோதனை) சட்டம், 2017-ன் படி கைப்பற்றும் உத்தரவு பிறப்பித்து, அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த நெறி நடைமுறைகள் டிசம்பர் 7, 2017 முதல் நடைமுறைக்கு வருகின்றன. இது குறித்த தகவல்களை www.mca.gov.in மற்றும் www.ibbi.gov.in ஆகிய  இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்


(Release ID: 1512493) Visitor Counter : 207


Read this release in: English