சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இரண்டாவது இந்தியா – மியான்மர் – தாய்லாந்து மோட்டார் பேரணி நடைபெறகிறது
குவஹாத்தி முதல் பேங்காக் வரையிலான முதலாவது கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த்து; பேரணி தற்போது திரும்பும் பயணத்தில் உள்ளது
Posted On:
12 DEC 2017 4:03PM by PIB Chennai
இரண்டாவது இந்தியா – மியான்மர் – தாய்லாந்து மோட்டார் பேரணி –ஐஎம்டி – II தனது குவஹாத்தி முதல் பாங்காக் வரையிலான முதல் கட்டத்தை வெற்றிகரமாக 2017 டிசம்பர் 3ம் தேதி அன்று நிறைவு செய்வது. இந்தப் பேரணி 2017 நவம்பர் 25ம் தேதி குவஹாத்தியில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஐந்து பெண்கள் உட்பட 50 பேர் 20 எஸ்யுவி வாகனங்களில் பங்கேற்றுள்ளனர். இந்த பேரணி கோஹிமா மற்றும் இம்பாலில் இரவு தங்கியது. அதனை அடுத்து தாய்லாந்தின் எல்லைப்பகுதி நகரமான மோர்ச்க்கு அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திரு. தரடோல் தாங்கருவாங் – ஆல் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. மோரே தாமு எல்லையில் இந்திய பகுதியில் உள்ள நிலஎல்லை வரை எவ்வித இடையூரும் இன்றி இந்த மோட்டார் பேரணி மியான்மர் நோக்கி பயணப்பட்டது. மியான்மரில் இந்தப் பேரணி காலே, பாகாண், மண்டாலே, ரங்கூன், மாலாம்யின், ஆகிய இடங்கள் வழியாக கடந்து சென்றது. இம்மாதம் இரண்டாம் தேதி தாய்லாந்தின் மே சாட் எல்லையை கடந்தது. டிசம்பர் மூன்றாம் தேதி முன்னாள் தலைநகர் சுகோத்தாய் வழியாக பாங்காக் சென்றடைந்தது
கலிங்கா மோட்டார் விளையாட்டுகள் மன்றம், மகிந்திரா தீரச் செயல் குழுவுடன் இணைந்து இந்த ஐஎம்டி இரண்டு மோட்டார் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவில் உள்ள மியான்மர், தாய்லாந்து தூதரங்களும், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரங்களும் வசதிகளைச் செய்து தந்த; மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்களும், நில சுங்கவரித் துறையும் முழு ஆதரவை அளித்தன.
இந்தப் பேரணி குறித்த புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணையதள இணைப்புகளை பயன்படுத்தலாம்.
https://drive.google.com/open?id=1wqLOcHKtVXs2rIDxN3hybVfUtbZsGZ0H
https://m.facebook.com/story.php?story_fbid=1545997248770508&id=100000807431879
https://m.facebook.com/story.php?story_fbid=10213823683562638&id=1123873040
https://m.facebook.com/story.php?story_fbid=10213824039131527&id=1123873040
(Release ID: 1512478)
Visitor Counter : 174