குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஆப்கானிஸ்த்தான் இரண்டாவது துணை அதிபர் திரு. முகமது சர்வார் டேனிஸ்யுடன் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு நடத்தினார்
நமக்குப் பொதுவான அண்டை நாட்டில் நிலவும் பங்கரவாதத்துக்கான அரசு ஆதரவுக் கொள்கையை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும்: திரு. வெங்கையா நாயுடு
Posted On:
12 DEC 2017 3:58PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் . வெங்கையா நாயுடு இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இரண்டாவது துணை அதிபர் திரு. முகமது சர்வார் டேனிஸ்யுடன் இன்று புது தில்லியில் பேச்சு நடத்தினார்.
இந்தியாவின் முதலீடு மற்றும் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஈரானில் உள்ள சாபகார் துறைமுகத்தின் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்கத் தொடங்கியிருக்கிறது என்று இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். 2017 ஜுன் மாதம் விமான சரக்குப் போக்குவரத்து திட்டத்தின் படி ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 50 விமான சேவைகளுக்கு மேல் நடந்தப்பட்டிருப்பதாக திரு. வெங்கையா நாயுடு கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சென்ற ஆண்டு வரை 200 கோடி அமெரிக்க டாலர் உதவியை அளித்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். 2016 செப்டம்பர் மாதம் நமது பிரதமர் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 100 கோடி அமெரிக்க டாலர் கூடுதல் உதவியை அறிவித்தார். இவையெல்லாம் 2017 செப்டம்பர் மாதம் புதிய மேம்பாட்டு பங்களிப்புக்கு உதவின: இந்த பங்களிப்பின் படி ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 31ல் ”உயர் தாக்கம் கொண்ட சமூதாய மேம்பாட்டுத் திட்டங்கள்” 116 ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக திரு. வெங்கையா நாயுடு தெரிவித்தார். மேலும் பல நடுத்தர மற்றும் பெரிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வர்த்தக, முதலீட்டு, முழு ஆசியா, யுரேசியா மண்டலத்தின் முக்கிய இணைப்பு மையமாக ஆப்கானிஸ்தான் உருவாக்கி வருகிறது என்று அவர் கூறினார்.
எல்லை தாண்டி பயங்கிரவாதிகள் அனுபவிக்கும் ஆதரவு மற்றும் அவர்களுக்கான புகலிடம் போன்ற ஆப்கானிஸ்தானை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்கள் பற்றி கவலை தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், பயங்கிரவாதத்திற்கு ஆதவரவளிக்கும் அண்டை நாட்டு அரசுக் கொள்கைகளைத் தீவரமாக எதிர்க்க வேண்டும் என்று கூறினார். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை 2001 க்குப் பிறகு இந்த ஆண்டுதான் மிக மோசமான வன்முறைகள் கொண்டதாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்ச் சேதத்தை கொண்டதாகவும் உள்ளது என்று கூறிப்பிட்ட திரு. வெங்கையா நாயுடு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பயங்கரவாதிகளுக்கான புகலிடங்களை அகற்றுதல் மற்றும் அவர்களுக்கான ஆதரவை அகற்றுதல் ஆகியவை தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு அமைப்பு உருவாக்க நாம் பாடுபட வேண்டும் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் குறித்த அமெரிக்காவின் புதிய கொள்கை குறித்து இந்தியா நன்கு உணர்ந்துள்ளது என்று தெரிவித்த திரு. வெங்கையா நாயுடு 2001 ம் ஆண்டு ஏற்பட்ட மாற்றத்திற்கு பிறகு மிக மதிப்பு மிக்க அண்டை நாடாகாவும் பாதுகாப்பு கூட்டாளியாகவும் உள்ள ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பில் இந்தியா உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒன்றுபட்ட, ஆதிபத்திய உரிமை கொண்ட, ஜனநாயக, அமைதி மிக்க, நிலைத்த, வளமான, பன்முக நாடாக உருவாவதை இந்தியா ஆதரிக்கிறது என்றார். இரு நாடுகளுக்கு ம் இடையே சமீபத்திய மாதங்களில் தீவிர, ஆக்கப்பூர்வமான இரு தரப்பு உறவு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானின் தேசிய, ஒருங்கிணைந்த அரசை இந்தியா முற்றிலும் ஆதரிக்கிறது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர் எதிர்கால ஆப்கானிஸ்தானில் அனைத்தையும் உள்ளடக்கிய, ஒருமித்த அரசைக் காண விரும்புவதாகவும் கூறினார். ஆப்கானிஸ்தான் தலைமையிலான, ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான, , ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள சமரச முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என்றும் இத்தகைய முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வரையறையை பின்பற்றியதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட திரு. வெங்கையா நாயுடு, இதற்கான நிபந்தனைகள் நீர்த்துப் போக அனுமதிக்க கூடாது என்றார்.
(Release ID: 1512475)
Visitor Counter : 150