குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிறிஸ்துமஸ் தொடர்பான கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்றார்: நமது பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்
”சமயம் என்பது தனிநபர் சார்ந்தது, பண்பாடு என்பது வாழ்க்கை முறை”: திரு. எம். வெங்கையா நாயுடு
Posted On:
12 DEC 2017 3:52PM by PIB Chennai
புது தில்லியில் இன்று இந்திய கத்தோலிக் ஆயர்கள் மாநாடு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் . வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
ஏசு கிறிஸ்து போதித்து, கடைப்பிடித்த கொள்கைகளையும் நெறிகளையும் நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கிறிஸ்துமஸ் நினைவூட்டுவதாக அவர் கூறினார். கிறிஸ்துமஸ் அன்பு, மகிழ்ச்சி , பகிர்ந்து கொள்ளுதலின் திருவிழா என்று திரு. எம், வெங்கையா நாயுடு கூறினார். என்றும் நமது குடும்பங்கள் சமூதாயங்கள் ஆகியவற்றின் மீது அன்பு செலுத்தி சேவை புரிய நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை புதுப்பித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறினார். நமது செயல்பாடுகளில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும், அனைவரையும் உள்ளடக்கிய சமூதாயப் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும், பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே நிலையான அமைதியை உருவாக்க வேண்டும், நிலைத்த மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாம் அனைவரும் நமது அன்னை, தாய் மொழி , பிறந்த இடம், தாய் நாடு ஆகியவற்றை மரியாதையுடன் நேசிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். நமது பண்பாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றார் அவர். சமயம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது, பண்பாடு என்பது வாழ்க்கை முறை என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
”கத்தோலிக்க சமுதாயம் அமைதியை விரும்பும் சமூதாயம் என்று பாராட்டிய அவர் மக்கள் நலனுக்காக மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார். தனிநபரின் அறிவு மற்றும் உணர்வுகளில் உள்ள நல்ல பண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்ட கல்வி, இரக்கம், நன்னெறிகள், நன்நடத்தை ஆகிய நெறிகளை அது உருவாக்குகிறது. நற்குணத்தை உருவாக்கவும், திறமையை மேம்படுத்தவும், நன்னடத்தை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கவும், அது உதவ வேண்டும்” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
தேவ சபையின் சமூக மற்றும் பொது நல நடவடிக்கைகளை பாராட்டிய திரு. வெங்கைய நாயுடு நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவ மனைகள் மற்றும் இதர மருத்துவ வசதிகளை கத்தோலிக்க தேவ சபை நடத்தி வருகிறது என்றும் அதன் சுகாதார திட்டங்களின் கீழ் பல லட்சக்கணக்கான ஏழைகளுக்கு சேவை புரிகிறது என்றும் கூறினார். நாட்டின் ஒட்டுமொத்த கிறிஸ்துவ சமூதாயத்துடன் இணைந்து இந்திய கத்தோலிக்க சமூதாயமும் வலுவான ஒன்றுபட்ட புதிய இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக பங்களித்து வருகிறது என்று கூறினார்.
ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் பெரும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களின் காலம் என்று திரு. வெங்கையா நாயுடு கூறினார். கிறிஸ்துமஸ் சமயங்களில் கிறிஸ்துவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி, அமைதி, பரஸ்பர பரிசு வழங்குதல் ஆகியவற்றுடன் வாழ்த்திக் கொள்ளுவதாகவும் கூறினார். ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியான கொண்டாட்ட திருவிழா என்றும் சாதி, சமய, தேசிய வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாகவம் அவர் கூறினார்.
”ஏசுவின் செய்தி அனைத்துக் காலத்துக்கும் , அனைத்து பண்பாட்டுக்கும், அனைத்து சமயங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும் ஆனது. உண்மையில் அனைத்து சமயங்களும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், பாசம் ஆகியவற்றையே போதிக்கின்றன” என்றும் திரு. வெங்கையா நாயுடு கூறினார்.
(Release ID: 1512473)
Visitor Counter : 199