எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு கூடுதல் இருப்பு குறித்த சர்வதேச அமைப்பில் மத்திய எஃகு துறை அமைச்சர் பிரேந்தர் சிங்கின் உரை.

Posted On: 02 DEC 2017 3:43PM by PIB Chennai

பெர்லினில் நவம்பர் 30, 2017ல் நடந்த எஃகு கூடுதல் இருப்பு குறித்த சர்வதேச அமைப்பில் மத்திய எஃகு துறை அமைச்சர் பிரேந்திர சிங் உரை வருமாறு:

 

‘‘தலைவர் மற்றும் ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெர்மனியின் மத்திய பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் திரு. பிரிகெட் ஜிப்பிரைய்ஸ், துணைத்தலைவர்கள், அமெரிக்கா, சீனா பிரதிநிதிகள் மற்றும் சீமாட்டிகளே, கனவான்களே அனைவருக்கும் வணக்கம். ஹங்ஜோ மற்றும் ஹம்பர்க் தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய தீர்மான நிலைக்கு வருவதற்காக எஃகு கூடுதல் இருப்பு குறித்த சர்வதேச அமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்காக அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். எஃகு கூடுதல் இருப்பு குறித்த தங்கள் கவலைகளை தலைவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அதனால், கூடுதல் இருப்புக்கு காரணமாக விளங்கும், அனைத்து சந்தை மானிய தடைகளையும், பிற ஆதரவு நடவடிக்கைகளையும் நீக்க வேண்டியது அவசியம்.

டபிள்யூ.டி.ஓ. உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், நியாயமான உலகளாவிய சந்தையை நோக்கி நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விதிகளில் சில விலகல்கள் இருக்கும்போது, வர்த்தகத்தில் நிவாரண நடவடிக்கைகளான, பொருட்கள் குவிப்பு வரிகள், பாதுகாப்புக்கான வரிகள் அல்லது இவற்றை எதிர்க்கொள்வதற்கான வரிகள் ஆகியவை தொடர்பாக நாடுகள் உதவிகளை பெறலாம். ஒரு  நாட்டின் நியாயமற்ற மானியங்கள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள், மற்ற நாடுகளை பாதிக்கின்றன. இந்த மானியங்கள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் சந்தையை பாதிக்கின்றன. மேலும், இவை கூடுதல் எஃகு உற்பத்தி இருப்புக்கு வழிவகுக்கின்றன.

கூடுதல் எஃகு இருப்பு சவால்களுக்கு எதிராக சீரிய நடவடிக்கை எடுக்க, சர்வதேச அமைப்பின் உறுப்பு நாடுகள், ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இணைந்து செயல்படவும், உறுதியான கொள்கைளை ஏற்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளன. கூடுதல் எஃகு இருப்பை குறைக்க வளர்ச்சி பட்டியல் அடிப்படையிலான ஆறு வழிகாட்டி கொள்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அ. கூடுதல் எஃகு இருப்பு சவால் குறித்த சர்வதேச நிலை குறித்து தெரிவித்தல் மற்றும் தேவையான கூட்டு நடவடிக்கைகள்.

ஆ. சந்தையின் இயக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சீர்படுத்துதலை ஊக்குவித்தல்.

இ. வெளிப்படை தன்மையை அதிகரிக்கச் செய்தல், சீராய்வு மற்றும் சந்தை நிலவரங்களை ஆராய்தல் மற்றும் எஃகு கொள்கைகள்.

இந்த ஆறு வழிகாட்டி கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேச அமைப்பு சில முக்கிய பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய பரிந்துரைகளை பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. சில நாடுகள் மட்டும் அது குறித்து எச்சரிக்கை செய்துள்ளன. முக்கிய பரிந்துரைகளில்,  இந்தியாவுக்கும் ஒரு பகுதியில் கவலை உள்ளது. அரசு அல்லது அரசுடன் தொடர்புடைய அமைப்புகளின் மானியங்கள் மற்றும் பிற ஆதரவு நடவடிக்கைகள் தடுப்பு ஆகியவை தொடர்பான கொள்கை பரிந்துரைகளை இந்திய ஒப்புக் கொண்டுள்ள அதே நேரத்தில், டபிள்யூ.டி.ஓ.வின் ஒப்பந்தங்கள் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. வரைவு அறிக்கையில், மானியங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தங்களை ஆதரிப்பதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானது அல்ல. அதுதவிர டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தத்தில் உள்ள வேறு சில ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் முக்கிய பரிந்துரையில் இடம்பெற வேண்டும். முக்கிய பரிந்துரைகளை தயாரிக்கும் அதேநேரத்தில், டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தங்கள் குறித்தும் மறந்துவிடக்கூடாது.

வலிமையான மற்றும் உறுதியான தலைமைப்பண்பு கொண்ட பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான, எங்கள் அரசின் கொள்கைகள் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தினால், கட்டுமானம், சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, ஆட்டோமொபைல், கப்பல் கட்டுமானம் மற்றும் மின்துறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு துறைகளில் உள்நாட்டு முதலீடு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் எஃகு தேவையும் அதிகரிக்கும்.

சர்வதேச கூடுதல் எஃகு இருப்பு சவாலை எதிர்க்கொள்ள தேவையை அதிகரிக்கச் செய்வதுதான் சிறந்த வழிகளில் ஒன்று. வரைவு அறிக்கையில், எஃகு பயன்பாட்டின் புதிய தேவையை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வது முக்கிய பரிந்துரையில் ஒன்றாக உள்ளது. இது எஃகு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சிறப்பு உள்ளீடுகளில் எஃகு பயன்பாடு குறித்து, ஆய்வு மற்றும் மேம்பாட்டு (ஆர் அண்ட் டி) பணிகள் மூலம் புதிய தேவைகளின் வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் எஃகு துறை, ஒழுங்குப்படுத்தப்படாத துறையாக உள்ள நிலையில், இத்துறையில் முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தின் அடிப்படையில் ஆலைகளை அமைத்து கொள்ள முடியும். மேலும், இத்துறையில் தற்போதுள்ள மற்றும் எதிர்க்கால சந்தை தேவையின் அடிப்படையில் முதலீடுகள் சார்ந்துள்ளது. இந்திய எஃகு சந்தையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சரிசமமாவே போட்டியிடுகின்றன. எஃகு துறையில் நம்பிக்கை வாய்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எதிர்க்காலத்தில் இந்தியா எஃகு முதலீட்டில் முக்கிய இடமாக திகழும். புதிய எஃகு ஆலைகளுக்கு எந்த நிதியுதவியும் அளிப்பதில்லை என்பதே அரசின் கொள்கை. எஃகு நிறுவனங்கள் போட்டிகள் மற்றும் சிறப்பான கடன் அணுகுமுறைகள் மூலம்தான் நீடித்திருக்க முடியும். புதிய திவால் சட்டத்தின்படி, நிதிச்சுமையில் தள்ளாடும் நிறுவனத்தை வேறொரு நிறுவனம் வாங்க முன்வரும்போது, அது வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.

இந்த குழுவில் இருக்கும் 33 உறுப்பு நாடுகள், உறுதியான எஃகு வளத்தை பெற்றுள்ளன. இவைதான் சர்வதேச எஃகு சந்தையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளன. எஃகு ஆலைகள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களை சர்வதேச அமைப்பு தயாரித்துள்ளது. இதேபோல், பல்வேறு அரசாங்கங்களின் எஃகு துறை பற்றிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல் களஞ்சியத்தை வைத்துள்ளது. மேலும் சீரான இடைவெளியில் இந்த சர்வதேச அமைப்பு கூடி, உறுப்பு நாடுகள் அளித்த தகவல்கள் பற்றி மேலும் விவாதிப்பது, மதிப்பீடு மேற்கொள்வது, சீராய்வு செய்வது என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

சந்தையை பாதிக்கும் மானியங்கள் மற்றும் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும் பிற ஆதரவு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி விவாதிப்பது சர்வதேச அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளுக்கு பயனுள்ளதாக அமையும். சந்தையை பாதிக்கும் சர்வதேச கூடுதல் இருப்பு சவால்களை எதிர்க்கொள்ள தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டாக செயல்படுதல் ஆகியவை நமக்கு உதவிகரமாக இருக்கும்.

சர்வதேச அமைப்பில் புதிதாக தலைமை பொறுப்பில் இருக்கும் அர்ஜென்டினா, துணைத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றின் கைகளில் முக்கியமான இறுதி வளர்ச்சி அறிக்கை உள்ளது. ஹங்ஜோ மற்றும் ஹம்பர்க் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நினைவில் கொண்டு, இந்த அறிக்கையில் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உள்ளது. இந்த நடவடிக்கையில், வர்த்தக பிரச்னைகளை நினைவில் கொள்ளாமல், தகவல்கள் சீராய்வு என்பது உண்மையான கூட்டு நடவடிக்கையின் அடிப்படையி்ல் அமைய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது இந்த சர்வதேச அமைப்பின் இயக்கத்தை பாதிக்கும். எஃகு கூடுதல் இருப்பு என்ற சந்தை பாதிப்புகளை நீ்க்குவதில் நம் அனைவருக்கும் பொறுப்புணர்வு உள்ளது’’.

நன்றி.

*****



(Release ID: 1512468) Visitor Counter : 147


Read this release in: English