சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

AHWPயின் 22-வது மாநாட்டை திருமதி. அனுப்ரியா படேல் தொடங்கி வைத்தார்

Posted On: 05 DEC 2017 3:36PM by PIB Chennai

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் இணை அமைச்சர் திருமதி. அனுப்ரியா படேல் அவர்கள் இன்று AHWPயின் (Asian Harmonization Working Party ) 22-வது மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  மத்திய அரசின் மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO)  மற்றும்  இந்தியாவின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NDRA)   அமைப்புகள் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை  நடத்துகின்றன. இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக, ஆசியக் கண்டம் மற்றும் அதற்கப்பாலும் மருத்துவ சாதனங்கள் ஒழுங்குமுறை விதிகளில் ஒருங்கிணைப்பும் ஒத்திசைவான அணுகுமுறைகளை மேம்படுத்துவதும் புதியனவற்றை பரிந்துரை செய்வதும் இருக்கிறது. ஒழுங்குமுறைப் படுத்துவோர் மற்றும் அந்த தொழில்துறையில் இருப்போர் இடையே அறிவையும் நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்வதற்கு உதவுவதும் இதில் அடங்கும்.

       AHWP அமைப்பு 1999 இல், ஒரு தன்னார்வ, இலாப நோக்கற்ற நிறுவனமாக நிறுவப்பட்டது. இதில் 30 நாடுகளின் தேசிய அளவிலான ஒழுங்குமுறைப்படுத்துவோர் மற்றும் தொழில்துறை சார்ந்த உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்சர்வதேச மருத்துவ சாதன ஒழுங்குபடுத்துவோர் அமைப்பு (IMDRF) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆசியா மற்றும் பிற நாடுகளில் மருத்துவ சாதன ஒழுங்குமுறைகளில், ஒத்திசைவான கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, இது தொடர்பான  சர்வதேச நிறுவனங்களான, IMDRF, WHO மற்றும்  சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO, போன்றவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
       இந்தியாவில் தயாரிப்போம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுபுதியன கண்டுபிடித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாதகமான சுற்றுச்சூழலை நாட்டின் மருத்துவ சாதனத் துறையில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் சுகாதார அமைச்சகம் சமீபத்தில் மருத்துவ சாதன விதிகள் -2017  என்ற ஒழுங்குமுறையை அமுல்படுத்தியுள்ளதுசர்வதேச அளவிலான ஒழுங்குமுறை நடைமுறைகளுடன் மேலான இணக்கத்திற்கும் வெளிப்படையான, முற்கூட்டியே கணிக்கக் கூடிய, வலுவான ஒழுங்குமுறை அமைப்பை பெறுவதற்கும் இது பயன்படும். மருத்துவச் சாதனங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் செயற்கை கண்டறிதல் முறைகளின் பாதுகாப்பு, தரம், அவற்றின் செயல்பாட்டை இது மேலும் உறுதிப்படுத்தும்இந்தியாவில் தயாரிப்போம் என்பதை ஊக்குவிக்க, மருத்துவ சாதனங்கள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை ஏற்கனவே கூடுதலாக அனுமதித்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதற்கு கொடுக்கப்படும் இத்தகையை ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமும், வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலமும், இத்துறையில் தொடர்புடையை அனைவருக்கும் சாதகமான சூழலை உருவாக்க அரசாங்கம் முயன்று வருகிறது.
       இதுபோன்ற முயற்சிகள், சிறந்த தரத்துடன் கூடிய மலிவான மருத்துவ சாதனங்கள், பரந்த மற்றும் மாறுபட்ட புவிசார் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அரசாங்கம் கருதுகிறது.
       தொடக்க விழாவில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் செயலர்,  திருமதி.  பிரித்தி சுதன்சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர், டாக்டர் ஆர்.கே.வாட்ஸ் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், CDSCO, NDRA அமைப்பின் அதிகாரிகள்பிற நாடுகளில் இருந்து வந்திருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் இணைந்து செயல்படும் மேம்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


(Release ID: 1512462) Visitor Counter : 137


Read this release in: English