நித்தி ஆயோக்

டி.ஆர்.சி.-நிதி ஆயோக் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல்

Posted On: 05 DEC 2017 3:34PM by PIB Chennai

நிதி ஆயோக் மற்றும் சீனாவின் மேம்பாட்டு ஆராய்ச்சி கவுன்சில் இடையிலான கலந்துரையாடலின் மூன்றாவது கூட்டம் இன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் , டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் (அமைச்சர்) திரு. லி வெய் ஆகியோர் இந்த அமர்விற்கு கூட்டுத்தலைமை ஏற்றனர்.

 

       நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் தலைமையில் இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்குழுவில் நிதி ஆயோக், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். சீனப் பிரதிநிதிகள் குழுவில்  சீன மேம்பாட்டு ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள்நிதி, வர்த்தகம், வெளிநாட்டு விவகாரத்துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி கமிஷனின் அதிகாரிகள் பங்கேற்றனர். 


     டி.ஆர்.சி.-நிதி ஆயோக் இடையிலான இந்தக் கலந்துரையாடல்,  இரு நாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பேரளவு-பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் இருதரப்பாருக்கும் அக்கறையுள்ள பகுதிகள் குறித்து  விவாதிப்பதற்கான முக்கியத் தளமாக அமைந்தது. உலகப் பொருளாதார வாய்ப்புகள், இந்தியா-சீனா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நடைமுறைகள் குறித்து இரண்டு குழுக்களுக்குமிடையே ஓர் ஆழ்ந்த கருத்து பரிமாற்றத்திற்கு இந்த மூன்றாவது கலந்துரையாடல் ,உதவியிருக்கிறது.  உலகளவில் நிலவும் உறுதியற்றத் தன்மை மற்றும் பலவீனமான உலக வளர்ச்சிச் சூழலில்உலகின் இரண்டு பெரிய மற்றும் விரைந்து வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும்,   வருமாண்டுகளில் உலகப் பொருளாதாரம்  செல்லவேண்டிய பாதையினை முடிவு செய்வதில் பெரும் ங்கை ஆற்றவிருக்கின்றன என்பதை இச்சந்திப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டது.

 

       நிலையான வளர்ச்சியை அடைவதற்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த தங்கள் எண்ணங்களை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். மின் சக்தியை கடத்துதல், தூய்மையான  எரிசக்தி, உயர் கல்வி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற துறைகளில் பெற்ற அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதில் ஆழ்ந்த விவாதங்கள் நடைபெற்றன.
        வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். சமமான, நிலையான இருதரப்பு வர்த்தகத்தை  தொடர்ந்து வலியுறுத்துவதன் முக்கியத்துவத்துவம் கவனத்தில் கொள்ளப்பட்டது. மேலும்  இந்தியப் பொருளாதார வெளியில் சீன முதலீடுகள் ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளுக்கும் சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது.

   டி.ஆர்.சி.-நிதி ஆயோக் இடையிலான நான்காவது கலந்துரையாடலைந்தியாவில் 2018ஆம் ஆண்டில் நடத்திட இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

 


(Release ID: 1512460) Visitor Counter : 178


Read this release in: English