விவசாயத்துறை அமைச்சகம்

உலக அளவில் மீன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக மாறியுள்ளது : திரு. ராதாமோகன் சிங்

2016-17-ல் நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 11.41 மில்லியன் டன்கள் அளவை எட்டியுள்ளது: திரு. சிங்

Posted On: 13 DEC 2017 1:10PM by PIB Chennai

E.E.E.-யில் முன்னர் அமல் செய்யப்பட்ட ``அனுமதிக் கடிதம்'' அல்லது ``L.O.P'' 2017 ஜனவரியில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்டது என்று  மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு. ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் EEZ பகுதியில் 12 கடல் மைல்களுக்கு அப்பால்  பாரம்பரிய மீனவர்களின் நலன்களைப் பாதுகப்பதற்கு குறிப்பிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவமழைக் காலங்களில் EEZ பகுதியில் அமல் செய்யப்படும் மீன்பிடி தடைக் காலத்தில் இருந்து பாரம்பரிய மீனவர்களுக்கு விலக்கு அளிப்பது; மீன்பிடி தொழிலுக்கு LED விளக்குகள் / இதர செயற்கை விளக்குகளைப் பயன்படுத்துதல், அண்மையில் 2017 நவம்பர் 10-ல் இருந்து bull trailing அல்லது pair trailing முழுமையாக தடை செய்யப்படுதல் போன்றவை உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அமல் செய்கிறது. அனைத்து கடலோர மாநில அரசுகளின் ஒப்புதலுடன், மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களில் இருந்து 61 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளது.

     நாட்டில் மீன்வளத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் `நீலப் புரட்சி' திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் திரு. சிங் தெரிவித்தார். இதன்விளைவாக கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த மீன் உற்பத்தி 18.86% அதிகரித்துள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தி 26%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அனைத்து வகையான மீன்வளங்களின் (பிடித்தல் மற்றும் வளர்த்தல்) அளவை ஒன்றாக சேர்த்தால், நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 2016 - 17ல் 11.41 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. நாட்டில் சுமார் 1.5 கோடி பேர் தங்கள் வாழ்க்கைக்காக மீன்வள தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள் என்று திரு. சிங் கூறினார். புதுடெல்லியில் புசா சாலையில் உள்ள தேசிய வேளாண்மை அறிவியல் மைய (NASC) வளாகத்தில் நடைபெற்ற ``உலக மீன்வள நாள் '' நிகழ்ச்சியில் பேசிய போது மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

*****



(Release ID: 1512448) Visitor Counter : 116


Read this release in: English