குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மனிதத்திற்கான சுயநலமற்ற சேவையே பக்தியின் சாராம்சம்: குடியரசுத் துணை தலைவர்

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 92வது பிறந்த தின கொண்டாட்டத்தை துவக்கிவைத்து உரை

Posted On: 22 NOV 2017 12:25PM by PIB Chennai

மனிதத்திற்கான சுயநலமற்ற சேவையே பக்தியின் சாராம்சம்: குடியரசுத் துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் புட்டபத்திரியில் உலா பிராஷாந்தி நிலையத்தில் இன்று ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 92வது பிறந்த தின கொண்டாட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா அவரின் பக்தர்களுக்கு அன்பான கடவுள், மற்றவர்களுக்கு உலகளாவிய ஆசிரியர் மற்றும் நல்ல மனிதநேயவாதி. உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள லட்ச கணக்கான மக்கள் மனித நேய சேவையில் ஈடுபட உத்வேகம் அளித்தவர். உண்மை, அன்பு, அமைதி, சரியான நடத்தை மற்றும் வன்முறை ஆகியவற்றை அவரின் போதனைகளை வலியுறுத்துகின்றன. தேசிய உணவர்வுடன் ஸ்ரீ சத்ய சாய் பாபா அமைப்பு செய்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை என்று குடியரசுத் துணை தலைவர் கூறினார்.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அறைகூவலை ஏற்று உலகில் அனைத்து பகுதிகளில் உள்ள அவர் பக்கத்தர்கள், 125 நாடுகளில் சேவை நிறுவனங்கள் அமைத்து சமூதாயத்தில் பின்தங்கி உள்ளவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். மேலும், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக வழிமுறையின் கீழ் செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூரில் அமைந்துள்ள 700 கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கியுள்ளது. அதேபோன்ற குடிநீர் விநியோக திட்டங்கள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதவரியிலும் தெலுங்கானா மாநிலத்தில் மேடக் மற்றும் மகாபூப்னகர்த்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வழிமுறையின் கீழ் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மேற்கொண்டுவரும் கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், போன்ற பல்வேறு இலவச சேவைகள் இந்தியா சமூகத்திலும் உலக மனிதநேயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் முக்கிய தத்துவ செய்தி அன்பு, அவர் தன்னலமற்ற அன்பின் உருவம் மற்றும் அவரது வாழ்க்கை மனிதகுலத்திற்கு தன்னலமற்ற அன்பின் சரித்திரமாகும். சாதி, நம்பிக்கை, இனம் அல்லது மத வேறுபாடு ஏதுமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பாபா சேவை புரிந்தார்.  நடைமுறையில் உள்ள அனைத்து நம்பிக்கைகளின் ஒற்றுமைக்கும் அவர் பிராச்சாரம் செய்து கடைபிடித்தார்.

*****



(Release ID: 1512444) Visitor Counter : 252


Read this release in: English