குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அனைவருக்கும் புரிகிற மொழியில் தகவல் தரப்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

மத்திய தகவல் ஆணையத்தின் 12 வது வருடாந்தர மாநாட்டைத் தொடங்கி வைத்தார்

Posted On: 06 DEC 2017 6:18PM by PIB Chennai

அனைவருக்கும், குறிப்பாக தகவல் பெற விண்ணப்பம் செய்வோர்க்கு, புரிகிற மொழியில் தகவல் தரப்படவேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு கூறினார். இன்று (டிசம்பர் 06) புது தில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் 12 வது ஆண்டு மாநாட்டினைத் தொடங்கி வைத்து கூடியிருந்தோரிடையே அவர் உரையாற்றினார். வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், தலைமை தகவல் ஆணையர் திரு. ராதா கிருஷ்ணமாத்தூர் மற்றம் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

தகவல் பகிர்வு, நாட்டு மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் கடப்பாடு என்பவை ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களாகும் என்றும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மையும் பொறுப்பேற்பும் ஜனநாயகத்தின் வெற்றிக்கான இரண்டு முக்கிய அம்சங்கள் என்று அவர் மேலும் கூறினார். சுயராஜ்யத்தை சுராஜ்யா  ஆக மாற்றுவது அவசியம் என்றும் வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்பகமான தகவல் கிடைப்பதை விரிவுபடுத்துவது நமது ஜனநாயகத்தை மேலும் முற்போக்கானதாகவும் பங்கேற்புடையதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். கவுடில்யர் கூற்றுப்படி. ”நல்ல நிர்வாகம் என்பது மக்களின் நல்வாழ்வைப் பூர்த்தி செய்யும் நோக்கமுடையதாகும் ’மன்னரின் பிரஜைகள் மகிழ்ச்சி அவனது மகிழ்ச்சியாகும். அவர்களின் நல்வாழ்வு அவனது நல்வாழ்வாகும்’ என்றார் அவர்

 

தகவல் அறியும் உரிமை என்பதை ஏற்றுக் கொள்வது  கடந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் அதிக்கரித்திருக்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். தகவல் பெறும் உரிமை என்பது அரசு பதில் சொல்லும்  கடமைக்கும் குடிமக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தவும் அரசின் செயல் பாட்டில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும் பெரிதும் பயன்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த அது வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

தகவல் ஆணையத்தால் விரைந்து தகவல் தருவது குடிமக்களின் குறைகளுக்கு வேகமாகத் தீர்வு கிடைக்க உதவும்; மேலும் மற்ற ஆணையங்களில் பதிவு செய்யப்பட்ட நேர்வுகளை விரைந்து பைசல் செய்வதற்கு ஒன்றிணைந்த மனப்பூர்வமான முயற்சிகளை ஊக்கப்படுத்தும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். மத்திய, மாநிலத் தகவல் ஆணையங்கள் அரசு நிர்வாகத்திற்கும் குடிமக்களுக்கும் இடையேயான பாலம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அவசியம் என்பது பற்றி நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டும். இதன் மூலம் தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.



(Release ID: 1512374) Visitor Counter : 135


Read this release in: English