இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு கண்காணிப்பாளர் பதிவியிலிருந்து சுஷில் குமார் மற்றும் மேரி சி. கோம் ராஜினாமா
प्रविष्टि तिथि:
06 DEC 2017 6:14PM by PIB Chennai
மல்யுத்தம் வீரர் திரு. சுஷில் குமார் மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி சி. கோம் தேசிய விளையாட்டு பார்வையாளர் பொறுப்பில் இருந்து விலகி செய்து உள்ளனர். இரு விளையாட்டு வீரரர்களும் தங்களின் துறைகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதால், இந்த பொறுப்புகள் தனிப்பட்ட லாபத்தை அடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தங்களை கருதக்கூடும் என கருதுவதாக அவர்கள் தங்கள் விலகல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். சிறந்த விளையாட்டு பாரம்பரியங்களை கருத்தில் கொண்டு, வீரர்கள் தங்களின் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இவர்களின் பதவி விலக்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. திரு. சுஷில் குமார் மற்றும் மேரி சி. கோமிற்கு நன்றி தெரிவித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு (தனி பொறுப்பு) துறை இணை அமைச்சர் கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், இருவரின் சிறந்த உட்பார்வை மற்றும் நிபுணத்துவம் மூலம் அரசு தொடர்ந்து பயன் பெறும் என்று தெரிவித்தார். நாட்டில் விளையாட்டு துறை வளர்ச்சி அடைவதில் இந்த விளையாட்டு வீரர்களின் அனுபவம் பெரிய பங்கு வகிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
*****
(रिलीज़ आईडी: 1512372)
आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English