தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் ஒவ்வொரு இல்லத்திற்கும் விளையாட்டை கொண்டு செல்வதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது; கர்னல் ராத்தோர்.

சி.ஐ.ஐ. பிக் பிக்சர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 06 DEC 2017 6:11PM by PIB Chennai

பள்ளிகளில் விளையாட்டை கட்டாயமாக்கும் முன்பு வீடுகளில் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் கர்னல் (ஓய்வு) ராஜ்யவர்தன் ராத்தோர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் ஒவ்வொரு இல்லத்திற்கும் விளையாட்டை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று சி.ஐ.ஐ பிக் பிக்சர் மாநாட்டில் கூறினார்.

நாடு முழுவதும் விளையாட்டை பிரபலமாக்குவதில் கைப்பேசி செயலிகளின் பங்கு குறித்து பேசிய அமைச்சர், கைப்பேசி செயலிகளில் விளையாட்டு தொடர்பான தகவல் சுலபமாக கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், கைப்பேசி செயலிகள் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள், விளையாட்டு உள்கட்டமைப்பு, வசதிகள் தெரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஏற்கனவே ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ஆறு விளையாட்டு பல்கலைகழகங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது. சிறந்த விளையாட்டு கருவிகளை உருவாக்க அரசு அனைத்து உற்பத்தியாளர்களையும் ஒரே இடத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறது. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்கவும் அரசு முயற்சித்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.


(Release ID: 1512370) Visitor Counter : 165
Read this release in: English