சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தடுப்பூசி இலக்கை அடைவதற்கான முயற்சிகளுக்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய சுகாதார அமைச்சகமும் ரோட்டரி இந்தியாவும் கையெழுத்திட்டது

प्रविष्टि तिथि: 06 DEC 2017 6:06PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் ரோட்டரி இந்தியா அமைப்பிற்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்ச்சி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த ஒப்பந்தத்தை இணை செயலர் (ஆர்.சி.எச்) திருமதி. வந்தனா குர்நானியும் ரோட்டரி சர்வதேச இந்திய தேசிய போலியோ பிளஸ்ஸின் தலைவர் திரு. தீபக்கப்பூரும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், போலியோ ஒழிப்பு நிகழ்ச்சி, தொடர் தடுப்பு ஊசி திட்டங்களான இந்திரதனுஷ் இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து, முயற்சிகளை தீவிரப்படுத்த வழி வகை செய்யும்.

கூட்டு முயற்சிக்கான முக்கிய பகுதிகள்:-

  1. நகர்புற சேரிகள் மற்றும் கூட்டம் சேராத  இடங்களில், பயனாளிகளை ஒன்று திரட்டுதல்.
  2. சமூகத்தினரை ஒன்று திரட்டுதலுக்காக என்.சி.சி, என்.ஒய்.கே, என்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு ஆதரவு அளிப்பது. புத்துணர்வூட்டும் சிற்றுண்டி அல்லது பானங்கள், நினைவு பரிசுகள் வழங்குதல்.
  3. போலியோ ஒழிப்பு திட்டம், வழக்கமாக தடப்பூசி வழங்கும் இந்திரதனுஷ் இயக்கம், தீவிர இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் தட்டம்மை ருபெல்லா ஆகியவற்றில் தனியார் மருத்துவர்களைக் கொண்டு புதிய அணுகுமுறைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் போலியோ ஒழிப்பு திட்டம், வழக்கமாக தடுப்பு ஊசி வழங்கும் இந்திரதனுஷ் இயக்கம், தீவிர இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் தட்டம்மை ருபெல்லா ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியாவில் உள்ள ரோட்டரி சர்வதேச இந்தியா தேசிய போலியோ பிளஸ் குழு மற்றும் சுகாதார அமைச்சகம் இடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

இன்னும் அணுகபடாத இடங்களையும் நாட்டில் உள்ள பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ள குழந்தைகளை சென்றடைவது என்ற புதுப்பித்த  ஈடுபாட்டுடன் அணுகுவோம் என்ற உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.

*****


(रिलीज़ आईडी: 1512366) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English