குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

திரு. அசோக் சிங்கால் சமுதாயத்திற்கு சுயநலமின்றி சேவையாற்றிய முன்னுதாரணமான நபர்: குடியரசுத் துணைத் தலைவர்

’அசோக் சிங்கால்: இந்துத்துவாவின் தீவிரப் பாதுகாவலர்’ நூலை வெளியிட்டார்

Posted On: 07 DEC 2017 5:34PM by PIB Chennai

திரு. அசோக் சிங்கால் சுயநலமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பிரச்சாரகராக அறுபது ஆண்டுகளுக்கு மேல் சமுதாயத்திற்கு சேவை அளித்த, அனைவரும் பின்பற்றத்தக்க தனிநபராக வாழ்ந்தவர் என்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். திரு. மகேஷ் பாக்சந்த்கா எழுதிய ‘அசோக் சிங்கால்: இந்துத்துவாவின் தீவிர பாதுகாவலர்என்ற நூலை அவர் வெளியிட்டுப் பேசினார். விழாவில் ஹரித்வாரில் உள்ள பாரத மாதா மந்திர் நிறுவனர் சுவாமி சத்யமித்ரானந்த் கிரிஜி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

திரு. அசோக் சிங்கால் இந்து மதத்தின் மிகச் சிறந்த ஆதரவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்றும் தனது வாழ்வின் 75 ஆண்டுகளை எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக தியாகம் செய்தவர் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். அறிவியல் மற்றும் பொறியியல் மாணவராகத் திகழ்ந்த போதிலும் கங்கைக் கரையில் தனது நேரத்தை செலவிட்டு மதம், சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி சிந்தித்தார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

மகாத்மா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட பலர் அழைப்பு விடுத்த போதிலும், திரு. சிங்கால், டாக்டர் கே.பி.ஹெட்கேவாரின் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் இணைந்து தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சங்கத்திற்கே அர்ப்பணிக்க முடிவு செய்தார் என குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

 

இந்தப் புத்தகம் இந்து மதத்தின் சித்தாந்தங்கள் மீது உறுதி கொண்ட இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவரான திரு. சிங்கால் அவர்களின் வாழ்க்கை, தத்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் சிந்தனைகளை எடுத்துக் கூறுவதாக குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். இந்தப் புத்தகம் “நமது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றடைவதே நமது இலக்கு என்றும் அதனால் உலகின் அனைத்து மக்களுக்கும் நமது இந்து மதம் மற்றும் இந்து வாழ்க்கைமுறை பற்றி தெரிந்து கொள்ள முடியும்என்றும் கூறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

திரு. சிங்கால் அவர்களின் கலாச்சார மற்றும் தேசியப் பெருமிதத்தை மீட்டெடுக்கும் அர்ப்பணிப்பை அருகில் இருந்து பார்த்து, ரசித்து மற்றும் கொண்டாடும் அதிருஷ்ட வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும், வருங்கால சந்ததியினரும் தேசத்திற்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டுவதுடன், தேச நலனுக்கான கடமைகளை ஆற்ற அவரிடம் இருந்து ஊக்கம் பெறுவார்கள் என நம்புவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.



(Release ID: 1512337) Visitor Counter : 154


Read this release in: English