குடியரசுத் தலைவர் செயலகம்

ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு கல்வி மையத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

Posted On: 07 DEC 2017 5:28PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், கடந்த 7-ம் தேதி விசாகபட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு கல்வி மையத்தை திறந்து வைத்தார். அங்கு மின்னணு வகுப்பறை வளாகத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், குறிப்பாக பொறியியல் கல்லூரியில் ,பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ளது மிகுந்த திருப்தி அளிப்பதாக கூறினார். பாதுகாப்பு கல்வி மையம் , இணைய பாதுகாப்பு, நானோ தொழில்நுட்பம், ராடார் மற்றும் தகவல் தொடர்பு , கடல் அரிப்புக்கு எதிரான தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகம் மற்றும் கடற்படை ஆராய்ச்சி வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதை குடியரசு தலைவர் தமது பேச்சில் குறிப்பிட்டார்பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணை திட்டங்களில் ஆராய்ச்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆலோசகர்களுடன் ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து ஆலோசிப்பது பாராட்டுக்குரியது  என்றார் அவர். கூடுதலாக, பல்கலைக் கழகத்தின் நிபுணத்துவம் , விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகத்தின் கட்டுமானப் பொறியியல் மற்றும் கடல் அரிப்பு தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான ஆராய்ச்சிகளும், தொழில் நுட்பமும் நம் நாட்டுக்கு பல வழிகளில் நன்மை ஏற்படும். இது இந்தியாவில் தயாரிப்போம் முயற்சிகளுக்கு ஊக்கமருந்தாக அமையும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களில் புதுமை சிவில் திட்டங்களுக்கும் பயன்படும் என்பது மற்ற நாடுகளின் அனுபவத்தின் மூலம் நமக்கு புலனாகிறது.

நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் காணப்படும் ஒட்டுமொத்த பாலின சமன்பாடற்ற தன்மை கவலை அளிப்பதாக உள்ளது என்று குடியரசு தலைவர் கூறினார். ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் 40 சதவீதம் பெண்கள் என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆந்திரப் பல்கலைக்கழக மகளிர் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் சோதனைக்கூட வளாகம், உயர்தரமான பெண் பொறியாளர்களையும், தொழில்நுட்ப அறிஞர்களையும் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி என்று வரும்போது , நமது மகள்களுக்கு உரிய வாய்ப்பையும், அணுக்கத்தையும் அளித்தால்தான்  இந்தியா உண்மையான முன்னேற்றத்தை அடையும் என்று குடியரசு தலைவர் கூறினார்நமது ஏவுகணை மற்றும் ராக்கெட் திட்டங்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் விண்வெளி விஞ்ஞானிகள் சிலர் பெண்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆக்ராவில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று புகழ்பெற்ற மூத்த டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி டெஸ்ஸி தாமசை வாழ்த்தியதை அவர் நினைவு கூர்ந்தார். பெண் சாதனையாளர்கள் இளையர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக, அவர் கூறினார்.



(Release ID: 1512332) Visitor Counter : 116


Read this release in: English