உள்துறை அமைச்சகம்

தேசிய மனித உரிமை ஆணையம் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை தினம் அனுசரிக்க உள்ளது

Posted On: 07 DEC 2017 5:25PM by PIB Chennai

தேசிய மனித உரிமை ஆணையம் டிசம்பர் 10, 2017 ஆம் தேதி மனித உரிமை தினம்  அனுசரிக்க உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்பார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் ஆன நீதிபதி எச். எல். தத்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது சபை நிறைவேற்றியதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ஆம் தேதி மனித உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமை ஆணையம் பல்வேறு போட்டிகளை நடைத்திவருகிறது. மனித உரிமை தினக் கொண்டாட்டம் என்ற தலைப்பில் குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறும்படப் போட்டியில் வெற்றிபெறும் முதல் படத்திற்கு ரூ. ஒரு லட்சம், இரண்டாம் படத்திற்கு ரூ. 75,000 மற்றும் மூன்றாம் படத்திற்கு ரூ. 50,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

மேலும், ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளின் புகைப்படம், நிகழ்ச்சி அரங்கில் அமைக்கப்படும் கண்காட்சியில் வைக்கப்படும்.

*****


(Release ID: 1512330) Visitor Counter : 139


Read this release in: English