வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கண்காணிப்பு முறைகள் போன்று நகரங்களுக்கான நவீன சாதனங்கள் குற்றச் செயலைப் பெருமளவு குறைத்திருக்கின்றன. மேலும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தியிருக்கின்றன
வாழ்கைகையைச் சிரமமின்றி மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது: ஹர்தீப் எஸ்.பூரி
Posted On:
07 DEC 2017 5:22PM by PIB Chennai
“வாழ்க்கையைச் சுலபமாக்கத் தொழில் நுட்பத்தின் மீது வலுவான கவனம் குவிகிறது. ஆனால் அதன் மீது பிரத்யோகமான மையப்படுத்தல் இல்லை. தொழில்நுட்பம் என்பது குடிமக்கள் பங்கேற்பை விரிவுபடுத்துகிறது. அடிப்படை சேவைகள் மற்றும் கட்டமைப்பு வழங்குவதை மேம்படுத்துகிறது. வாழிடப் பகுதிகளை மேலும் தகுதியுடைய தாக்குகிறது” என்று நேற்று மாலை (டிசம்பர் 07) இங்கு (புதுதில்லி) நடைபெற்ற பொலிவுறு கட்டுமான விருது வழங்கும் விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் பூரி தெரிவித்தார். மரபு சார்ந்த வளர்ச்சிப் பாதையிலிருந்து இந்தியர்கள் பாய்ச்சல் வேகத்தில் செல்வதற்கும் தொழில்நுட்பம் பயன்படுகிறது. மேலும் தொழில்நுட்பம் நீடிக்கவல்ல தன்மையையும் கொண்டிருக்கிறது – குறைவானதைக் கொண்டு நிறைவானதைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. இதனால் ஆதார வளங்கள் நுகர்வு குறைகிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக ஏழைகள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்குவது தொடர்பான அம்சங்களை வலியுறுத்திக் கூறிய திரு. பூரி இந்தியர்கள் அனைவரும் தூய்மையான நீடிக்கவல்ல சூழலை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்றார். தகவல் தொழில்நுட்பத்தில் நன்கறியப்பட்ட பெரும் சக்தியாக இருக்கும் இந்தியா, தனது அடிப்படைக் கட்டமைப்புகளுக்கும் அலுவலகங்களுக்கும் அந்த சக்தியைப் பயன்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
வாழ்க்கை எளிமைப்படுதலை மேம்படுத்துவது இறுதிநோக்கம் என்பதை வலியுறுத்தியதோடு இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நகரங்களில் வாழ்கிற ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தரமானதாக்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர் நமது அனைத்து முயற்சிகளும், இயக்கங்களும், நிகழ்வுகளும் இந்த திசைவழியே செல்லுவதாக இருக்கவேண்டும். “கண்காணிப்பு முறைகள் போன்று நகரங்களுக்கான நவீன சாதனங்கள் குற்றச் செயலைப் பெருமளவு குறைத்திருக்கின்றன. மேலும் குடியிருப்போருக்கான பாதுகாப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு நகரம் முழுவதும் வை-ஃபை வசதிகள் குடிமக்களிடையேயும் அதேபோல் பல்வேறு சேவை வழங்குவோருக்கும் தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது. குடிமக்களை ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது சமூகப் பாகுபாடுகளைக் குறைப்பது, வணிகத்திற்குரிய சேவைகளுக்கான நேரத்தைக் குறைப்பது ஆகியவற்றின் மூலமான இ- நிர்வாகமும் குடிமக்களின் கருத்தறிதலுக்கும் நிர்வாகத்தில் சமூக இணக்கத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும். ஒருங்கிணைந்த போக்குவரத்து நிர்வாகம் வேகத்தை அதிகரிக்கும்; நெரிசலைக் குறைக்கும்; மக்கள் சுவாசிக்கத் தூய்மையான காற்று கிடைக்கும்”
கசிவினைக் கண்டறிதல், தானியங்கிக் குடிநீர் விநியோகம், தரமான கண்காணிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படும் உணர்வி அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் தரமான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதற்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்; இயக்குதல் மற்றம் பராமரிப்பு செலவைக் குறைக்கும்; நீர்வழி பரவும் நோய்களைக் குறைக்கும். மக்களின் வாழ்கையைச் சீர்செய்ய ஏராளமான சக்தியையும் வாய்ப்புகளையும் தொழில்நுட்பம் நமக்குத் தந்துள்ளது. அவர்களின் வாழ்க்கையில் உண்மையான வேறுபாட்டை உருவாக்குகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
(Release ID: 1512326)
Visitor Counter : 177