குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுப்பிரமணிய பாரதி இந்தியாவின் குறுகிய உள்நாட்டு சுவர்களை உடைக்க விரும்பினார்: குடியரசுத் துணை தலைவர்
சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
11 DEC 2017 3:58PM by PIB Chennai
குரு தேவ் ரவீந்திரநாத் தாகூரை போல் இந்தியாவின் குறுகிய உள்நாட்டு சுவர்களை உடைக்க விரும்பினார் சுப்பிரமணிய பாரதி என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். சென்னையில் இன்று நடைபெற்ற தேசியக் கவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த தினக் கொண்டாத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்ந உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அறிவு களஞ்சியமான இவருக்கு அளிக்கப்பட்ட பட்டமே பாரதி என்பதும் மகாகவி என்பதும். இலக்கிய உலகத்திற்கு அவர் தனது பேச்சுகளாலும் கவிதைகளாலும் பெரும் பங்கு வகித்துள்ளார். கல்விக் கடவுளின் முழு ஆசியையும் பெற்றவர் மகாகவி என்று குடியரசுத் துணை தலைவர் கூறினார்.
அவரது நோக்கம் சுதந்திரமாக இருந்தது. அவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களிடம் இருந்து நம் நாடு விடுதலை அடைவதற்கு மட்டும் அல்ல பசி, பாலினப் பாகுபாடு, தீண்டாமை, அசுத்த சூழல், குறுகிய மொழியியல் மற்றும் மத மனநோய் ஆகியவற்றில் இருந்தும் இந்தியா விடுபட வேண்டும் என்று போராடினார்.
இந்தியாவின் சிறந்த பாரம்பரியம் மற்றும் இந்த பாரம்பரியத்தின் பகுதியாக உள்ள மொழி மற்றும் இலக்கியத்திற்காக இந்தியர்கள் பெருமை அடைய வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் கேட்டுக்கொண்டார். பாரதியார் இந்தியாவின் பன்முகத்தைத் கொண்டாடினார், அவர் அனைத்து மொழிகளையும் விரும்பினார் மேலும், அவர் தெலுங்கு மொழியினை சுந்தர தெலுங்கு என்று விவரித்தார் எனபதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
****
(रिलीज़ आईडी: 1512278)
आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English