வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மிளகுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலை – வர்த்தக அமைச்சகம் நிர்ணயம்

Posted On: 06 DEC 2017 2:05PM by PIB Chennai

மிளகு பயிரிடும் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் நறுமணப்பொருள் வாரியம் மிளகு ஒரு கிலோவுக்கு சி.ஐ.எஃப். மதிப்பிற்கு ரூ.500 என்று நிர்ணயம் செய்யக்கோரிய பரிசீலனைக்கு மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

     சமீபகாலமாக, பிற இடங்களிலிருந்து குறைந்த விலைக்கு மிளகு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு மிளகு விலை குறைந்துள்ளது. இது மிளகு பயிரிடுவோர் இடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டில் மிளகின் விலை சுமார் 35 சதவீதம் குறைந்துள்ளதால் மிளகு பயிரிடுவோருக்கு இது பெறும் பிரச்சினையை எற்படுத்தியுள்ளது.

     பெரும்பாலும்,   மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியான் மண்டலத்தில் உள்ளதால் இந்த நாடுகளில் இருந்து வரும் மிளகு இலங்கை வழியாக இறக்குமதி செய்யப்படுகிறது. சாஃப்டா மற்றும் ஐ.எஸ்.எல்.எஃப்.டி.ஏ. மூலம் மிளகு வந்தடைவதால் இறக்குமதி வரிச் சலுகைப் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து குறைந்த விலையில் மிளகு இறக்குமதியை தவிர்க்க குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பன போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

     மிளகு அறுவடைக் காலம் நெருங்கும் வேலையில், குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிப்பு உள்நாட்டு விலையை மேம்படுத்த உதவும்.

*****



(Release ID: 1512000) Visitor Counter : 107


Read this release in: English