சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 62வது நினைவு தினம் – நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2017 11:46AM by PIB Chennai
பாரத் ரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 62வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். நாடாளுமன்ற இல்ல வளாகத்தில் உள்ள சன்சத் பவன் புல்வெளிகளில் இன்று காலை குடியரசுத் தலைவர் பாபாசாகேப்புக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம் . வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மக்களவை தலைவர் திருமதி. சுமித்ரா மஹாஜன் ஆகியோரும் இந்திய அரசியல் சட்டமைப்பின் தந்தையான டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர்கள் திரு. கிருஷ்ணன் பால் குர்ஜார், திரு. விஜய் சம்ப்லா, திரு. ராம்தாஸ் அத்வாலே மற்றும் பிற பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அம்பேத்கர் அறக்கட்டளை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
(வெளியீட்டு அடையாள எண்: 1511998)
வருகையாளர் எண்ணிக்கை : 201