பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் - சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் என்ஜி எங் ஹென் கூட்டறிக்கை விவரம்-

Posted On: 29 NOV 2017 5:22PM by PIB Chennai

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் - சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் ஹென் இடையே 2-வது பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சு வார்த்தை நவம்பர் 29-ம் தேதி புதுடெல்லியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையே ஆயுதப் படை தொடர்பான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக 2015-ம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தை நடைமுறை தொடங்கிய நிலையில் இரு நா\ட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான இரண்டாவது பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

பேச்சு வார்த்தையின் போது இரு தரப்புக்கும் இ\டையிலான கடற்படை ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடல்வழிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது, கூட்டு ராணுப் பயிற்சி, பரஸ்பரம் தளவாடங்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் வழி பாதுகாப்புத் தொடர்பான கூட்டுப் பயிற்சி தொடங்கி அடுத்த ஆண்டு 25 ஆண்டுகள் முடிவடைகிறது. இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர்.

இந்த நிலையில் கடற்படை, ஆயுதப் படை ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூர் ஆயுதப் படை இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கு நமது அரசின் ஆதரவு குறித்து ஹென் தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற  சிங்கப்பூர்-இந்தியா பாதுகாப்புக் கொள்கையின் 11-வது கட்ட பேச்சு வார்த்தையின் போது இரு தரப்பு கடற்படை ஒ!ப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதை இரண்டு அமைச்சர்களும் வரவேற்றனர். அடுத்த ஆண்டும் இதே போல் வெற்றிகரமாக புதுப்பிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்தனர்.

சர்வதேச்ச் சட்டப்படி இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான கடற்பயணம், வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் இரு நாட்டு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டனர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் சிறப்பான பங்கு குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவுக்கான கடல்பாதையில் இந்தியா நிலையாகவும் தொடர்ந்தும் பிராந்தியத்தின் மற்ற நாடுகள், மற்றும் தென் கிழக்கு ஆசிய சங்கத்துடன் இணைந்து கடற்படைப் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதை ஹென் பாராட்டினார்.

இரு நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் பாதுகாப்புக்கு எதிரான பன்னாட்டு மிரட்டல்களை எதிர்கொள்வது, குறிப்பாக தீவிரவாதத்தை சமாளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக 2006-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு தொழில்நுட்ப வழிகாட்டு கமிட்டியின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் பாராட்டு தெரிவித்தனர். சிங்கப்பூரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அடிப்படை வசதி மற்றும் சோதனை மேற்கொள்வதற்கான இடங்களை வழங்க முன் வந்துள்ள இந்திய அரசுக்கு பாராட்டுதல்களையும் ஹென் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளும் சிங்கப்பூர்-இந்தியா பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் விண்வெளி, மின்னணு, மற்றும் பரஸ்பர விருப்பத்தின் பேரிலான பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்ரி- லா பேச்சு வார்த்தையின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நெடுநோக்கு குறித்து சிறப்புரை ஆற்றுவதற்கு சம்மதித்துள்ள பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஹென் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்\டார்.



(Release ID: 1511736) Visitor Counter : 163


Read this release in: English