பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

” ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் ” என்னும் ஒரு குடையின் கீழ் அமைந்த துணைத் திட்டங்கள் 2018, நவம்பர் வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 16 NOV 2017 5:18PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அங்கன்வாடி சேவைகள், வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டம், குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள், தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம் ஆகியவற்றை ரூ. 41,000  கோடிக்கும் மேற்பட்ட செலவீட்டில் 01. 04. 2017 முதல் 30. 11. 2018 வரையில் தொடர ஒப்புதல் அளித்துள்ளது. இவைஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள்என்னும் ஒரு குடையின் கீழ் அமைந்த துணைத் திட்டங்களாகும்.

அம்சங்கள் :

  . ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது :

  1. அங்கன்வாடிச் சேவைகள்
  2. வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டங்கள்
  3. குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள்
  4. தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம்

  . அமைச்சரவை கீழ்கண்டவற்றுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது :

  1. பள்ளிக்கு வெளியிலான 11 – 14 வயதுப் பிரிவிலுள்ள வளரிளம் பருவப் பெண்களுக்கான திட்டங்களின் கட்டம்கட்டமான விரிவாக்கத்தை நடைமுறைப்படுத்துவது
  2. பள்ளிக்கு வெளியிலான 11 – 14 வயதுப் பிரிவிலுள்ள  பெண்களுக்காக நடைபெற்றுவரும் கிஷோரி சக்தி யோஜனா திட்டத்தைப் படிப்படியாக விலக்கிக் கொள்வது

. இந்த முடிவு தேசியக் குழந்தைகள் காப்பகத் திட்டத்தை மத்தியத்  துறையிலிருந்து மத்திய ஆதரவுத் திட்டமாக மாற்றுகிறது. மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான திருத்தியமைக்கப்பட்ட செலவுப் பகிர்வை சட்டமன்றத்துடன் கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் , 60 : 40 என்கிற விகிதத்திலும் 9 : 10 என்கிற விகிதத்திலும்  வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹிமாலய மாநிலங்களுக்கு, சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசனங்களுக்கு 100% அளித்து,  நடப்பிலுள்ள அமலாக்க முகவாண்மைக்குப் பதிலாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மூலமாக நடைமுறைப்படுத்துகிறது.

 

முடிவின் தாக்கம்:

மேலே பட்டியலிடப்பட்ட துணைத்திட்டங்கள் எதுவும் புதிய திட்டங்கள் அல்ல. ஆனால் 12- ஆம் ஐந்தாண்டுத்திட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடையீடுகள் மூலம் இந்தத் திட்டமானது  ஊட்டச்சத்தின்மை, இரத்தச்சோகை, குறைந்த எடையுடன் கூடிய குழந்தைபிறப்புகள் ஆகியவற்றின் அளவையும் எண்ணிக்கையையும் குறைக்க முயற்சிக்கிறது. அத்துடன் வளரிளம்பருவப்  பெண்களுக்கான அதிகாரத்தை உத்தரவாதப்படுத்துகிறது. சட்டப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான காப்பகத்தை அளிக்கிறது. கூட்டிணைவை உருவாக்குகிறது. சிறந்த கண்காணிப்பை உத்தரவாதப்படுத்துகிறது, உரிய காலத்தில் எதிர்மறை எச்சரிக்கைகளை வழங்குகிறது, மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, அமைச்சரகங்களைக் கண்காணித்து வழிநடத்துகிறது, மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவும், மேலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் வழிகாட்டுகிறது.

பயனடைவோர் :

இந்தத் திட்டத்தின் வாயிலாக 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம்பருவப் பெண்கள் பலனடைவார்கள்.

நிதிச்செலவீடு :

பல்வேறு துணைத்திட்டங்களுக்கு 01.04.2017 முதல் 30.11.2018 வரையிலான காலத்திற்கு ஆகும் செலவினம் குறித்த விவரம் பின்வருமாறு  :

துணைத் திட்டத்தின் பெயர்                      

ஏற்பளிக்கப்பட்ட தொகை

( ரூபாய் கோடிகளில் )

அங்கன்வாடி சேவைகள்                                          

34441.34

தேசிய ஊட்டச்சத்துச் செயல்திட்டம் ( உத்தேசிக்கப்பட்டது )          

4241.33

வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டம்                               

1238.37

குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள்                                       

1083.33

தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம்     

349.33

மொத்தம்

41353.70

                      

அமலாக்க    உத்தியும்  இலக்குகளும் :

அங்கன்வாடி சேவைகளும் ( ஐசிடிஎஸ் ), குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளும் நமது நாடு முழுவதும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டம் கட்டம்கட்டமாக விரிவாக்கப்படவுள்ளது. தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம் 23,555 குழந்தைக் காப்பகங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தேசிய ஊட்டச்சத்துச் செயல்திட்டத்திற்காக ஒப்புதல் தனியாகப் பெறப்படவுள்ளது.

திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்கள் / மாவட்டங்கள் :

அங்கன்வாடி சேவைகளும் ( ஐசிடிஎஸ் ), குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளும் நமது நாடு முழுவதும் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. தேசிய ஊட்டச்சத்துச் செயல்திட்டம் கட்டம்கட்டமாகச் செயல்படுத்தப்படும். அதைப்போல, வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டமும் கட்டம்கட்டமாக விரிவுபடுத்தப்படும்.

பின்புலம் ::

தொடர்ந்து நடைபெற்றுவரும் திட்டங்கள் 2016 – 2017 நிதியாண்டில் முறைபடுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம் என்னும் ஒரு குடையின் கீழ், அதன் துணைத்திட்டங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. குழந்தை தொடர்பான சேவைகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்படும் பயனாளிகளுக்காக இந்தத் துணைத்திட்டங்கள் தொடரப்பட வேண்டியுள்ளது.

இந்தத் திட்டங்களின் நோக்கங்கள் கீழ்க்காணுமாறு அமையும் :

) அங்கன்வாடி சேவைகள் ( ஐசிடிஎஸ் ) ஆறு வயதிற்குட்பட்ட                       குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வயதுப் பிரிவில் உள்ள குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் இந்தச் சேவைகளின் பயனாளிகள் ஆவார்கள்.

வளரிளம்பருவப் பெண்களுக்கான திட்டத்தின் குறிக்கோளானது, வளரிளம்பெண்களை மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து, ஆரோக்கியநிலை ஆகியவற்றின் மூலம் தற்சார்பு உடையவர்களாகவும், விழிப்புணர்வு கொண்ட குடிமக்களாகவும் ஆக்குவதற்காக அவர்களைப் பயிற்றுவித்து ஆற்றல்படுத்துவதும், ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து  ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஊட்டி அவர்களைப் பள்ளிகளுக்கு அப்பால் பொதுவெளியில் முறைசார்ந்த அல்லது முறை சாரா கல்வியும் அளித்து, நிலவிவரும் பொதுச்சேவைகள் குறித்துத் தகவல்களும் வழிகாட்டுதல்களும் அளித்து வளர்த்தெடுப்பதும் ஆகும்.    

) குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளின் குறிக்கோளானது,                    சட்டப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கும், அக்கறையும் அரவணைப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதும் உத்தரவாதமானதுமான சூழலை அளிப்பது ஆகும். மேலும் விரிவான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதும்தவறாகப் பயன்படுத்துவது, புறக்கணிப்பது, சுரண்டுவது, கைவிடுவது, குடும்பத்திலிருந்து பிரிப்பது போன்றவற்றிலிருந்து தடுப்பதும்நிறுவனம் சாராத அரவணைப்பு தந்து அரசுக்கும் குடிமைச் சமூகத்திற்குமிடையில் இணைப்பு மேடையை உருவாக்குவதும் குழந்தை தொடர்பான சமூகப் பாதுகாப்புச் சேவைகளுக்கான கூட்டிணைவை ஏற்படுத்துவதும் இச்சேவையின் குறிக்கோள்களாகும்.

) தேசியக் குழந்தைக் காப்பகத் திட்டம், தாய்மார்கள் வேலைக்குச் செல்லும்போது தங்கள் குழந்தைகளை விட்டுச் செல்வதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இவ்வாறு பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவித்து அவர்களுக்கு அதிகாரமளிக்கும்  ஒரு நடவடிக்கையாக உள்ளது. அதேசமயத்தில், 6 மாதத்திலிருந்து 6 வயது வரையிலான பிரிவிலுள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றை நோக்கிய ஓர் திட்டமாகவும் அது உள்ளது.


(Release ID: 1511734) Visitor Counter : 176


Read this release in: English