வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய சட்டச் சேவைத் துறையில் சீர்திருத்தம் குறித்த வழக்கறிஞர் சங்க தலைமைப் பண்பு மாநாடு

Posted On: 20 NOV 2017 5:14PM by PIB Chennai

இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கம் , வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தை சேர்ந்த வர்த்தகத் துறை, வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இந்திய நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து, அண்மையில் புதுதில்லியில் ,இந்திய சட்ட சேவைத் துறையில் சீர்திருத்தம் குறித்த வழக்கறிஞர்கள் தலைமைப் பண்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு  (உயர்கல்வி) துறை இணை அமைச்சர் திரு. சத்ய பால் சிங் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் ,சட்ட நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்திய சட்டச் சேவைகள் துறையை தாராளமயமாக்குவதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கவலைகள் பற்றி மாநாடு ஆய்வு செய்தது.

மத்திய தொழில்,வர்த்தக அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு, கானொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அதிகரித்து வரும் தாவா தீர்ப்புக்கான நடைமுறையான அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த முறையைப் பயன்படுத்தி சட்டத்துறையினர் எளிதில் வர்த்தகம் புரிதல் முறையை வலுப்பெறச் செய்ய இந்த அமைப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்..

திரு. சத்ய பால் சிங், தமது தொடக்க உரையில், நீதி வழங்கும் முறையில் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியாவில் நீதியியல் நடைமுறைகள் பாரபட்சமின்றியும், நடுநிலையுடனும் செயல்படவேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து நீதியியல் நடைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கவிராஜ் சிங், மாநாட்டின் நோக்கத்தை அறிமுகம் செய்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் சட்ட நடைமுறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை அவர் பட்டியலிட்டார். 1. இந்தியாவில் நீதிபதிகளின் நடத்தை, 2. இந்திய சட்ட ஒழுங்குமுறை பிரிவில் சீர்திருத்தம் ,3. இந்திய சட்ட சேவைகளை தாராளமயமாக்குவது ஆகிய 3 முக்கிய அம்சங்களில் மாநாடு கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

 

வழக்கறிஞர்  சங்கத்தின் தலைவர் திரு. சுபாஷ் சி.காஷ்யப், வரவேற்புரை ஆற்றினார். சட்டப்பிரிவில் அவசியம் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டியது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

 

சட்டத்துறைச் செயலர் திரு. சுரேஷ் சந்திரா, தற்போது 900 கோடி டாலராக உள்ள சட்டச் சந்தையின் அளவை அதிகரிக்க மிகப்பெரிய வளம் இந்தியாவில் உள்ளது என்று கூறினார். இந்தத் துறையில் ஏற்படும் சீர்திருத்தங்கள், பிரதமரின் ‘’ சீர்திருத்து, மாற்றியமை, செயல்படு ‘’ என்னும் கருத்துடன் இணைவதாக இருக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

 

வர்த்தகத்துறைக் கூடுதல் பொருளாதார ஆலோசகர் திருமதி சங்கீதா சக்சேனா, பன்முகப்பட்ட சேவைகள் ஏற்றுமதியின் அவசியத்தை சுட்டிக்  காட்டினார்குறிப்பாக, சட்ட சேவைப் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த சேவைத் திறனை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.  

 

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.எஸ்.சூரி, இந்திய வழக்கறிஞர் சபை, மாநில வழக்கறிஞர் சபைகள், அரசு ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வை உறுதிப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார். இந்த முக்கியத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அடிக்கடி ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டிய தேவை பற்றி அவர் வலியுறுத்தினார்.

 

வர்த்தகம் மற்றும் சட்ட மையத்தின் தலைவர் பேராசிரியர். ஜேம்ஸ் நெடும்பாரா ,இந்தியாவில் உள்ள சட்டக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் பெரும் சவாலாக உள்ளவற்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். இதன் மூலம் இளைய இந்திய வழக்கறிஞர்கள், உலக இந்திய வழக்கறிஞர்களாக மாறி, உலக வர்த்தக பிரிவில் அதிகரித்து வரும் வாய்ப்புகளை பெற முடியும் என அவர் கூறினார்

 

 

சட்டச்  சேவைகளைத்  தாராளமயமாக்குவதில் சூழ்ந்திருக்கும் உண்மை நிலை மற்றும் கட்டுக் கதைகள் குறித்த விளக்கத்துடன் விவாதம் நிறைவடைந்தது. உலக அளவில் தொழில் முறையில் நிலவும் உண்மைச் சூழலுடன் இணைந்து செல்ல ,சட்ட சேவைப் பிரிவில் சீர்திருத்தம் அவசியம் என்று மொத்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

 

மாநாட்டின் நிகழ்வு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவும் இணையதளங்கள் -

 

 

Agenda: http://ctil.iift.ac.in/docs/LatestUpdates/INBA_agenda.pdf

 

Background Paper: http://ctil.iift.ac.in/docs/LatestUpdates/INBA_11112017.pdf

 

Twitter https://twitter.com/ctil_india  .


(Release ID: 1511730) Visitor Counter : 232


Read this release in: English