வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம் (நகர்ப்புறம்) உள்ளிட்ட நகர்ப்புற இயக்கங்களின் நீண்ட கால உத்திகள் மற்றும் அவற்றை முன் எடுத்துச் செல்லுதல் குறித்த தேசியக் கலந்தாலோசனை
பங்களிப்பின் மூலம் குறைந்த விலை வீட்டுவசதி (AHP) மற்றும் ஸ்தலத்திலேயே குடிசைப்பகுதிகளை மறுபடி மாற்றியமைத்தல் (ISSR) நடைமுறைகளின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு 16 புதிய தொழில்நுட்பங்களைக் கையாளுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டப்பட்டுள்ளது.
சி.எல்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், துணை ராணுவப் படையினர், மாநிலக் காவல் துறையினர் இலக்காக்கப்படுவார்கள் பெருமளவு வீட்டுவசதித் திட்டத்திற்கு சிறந்த தொழில்நுட்பங்களை அடையாளங்காண உலக வீட்டுவசதி கட்டுமானத் தொழில் நுட்ப அமைப்பு (ஜி.எச்.சி.ட்டி.சி) உத்தேசித்துள்ளது.
Posted On:
29 NOV 2017 3:33PM by PIB Chennai
பிரதம மந்திரியின் வீட்டு வசதித்திட்டம் (நகர்ப்புறம்) உள்ளிட்ட நகர்ப்புற இயக்கங்களின் அமலாக்கத்தை விரைவுபடுத்துவது குறித்த ஒரு நாள் தேசிய கலந்தாலோசனைப் பயிலரங்கை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் சிங் பூரி கடந்த வெள்ளியன்று தொடங்கி வைத்தார். அமைச்சகத்தின் செயலாளர் திருமதி, துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில் மாநிலங்களின் (நகர்ப்புற மேம்பாட்டு) முதன்மைச் செயலாளர்கள், மாநில இயக்கங்களின் இயக்குநர்கள், மாநகராட்சி ஆணையர்கள், ஐந்து லட்சமும் அதற்குக் கூடுதலாகவும் மக்கள் தொகை உள்ள மற்றும் என்.சி.ஆர். பகுதியின் அருகே உள்ள நகரங்களின் அதிகாரிகள், அதேபோல் அமைச்சகத்தோடு தொடர்புடையவர்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 170 பேர் பங்கேற்றனர். முன்னேற்றம் ஏற்பட கீழ்க்காணும் நீண்டகால உத்திகள் ஆலோசனையாகத் தெரிவிக்கப்பட்டன:
- பயனாளிகள் செல்லத்தக்க நில ஆவணங்கள் (நிலப்பட்டாக்கள் / நிலஉடைமை) கொண்டிருப்பதை உறுதி செய்ய மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் தேவையான நிலச்சீர்திருத்தங்களை அமலாக்குவது அவசியம்.
- நில வரைபட ஏற்புகள் மற்றும் கட்டுமான அனுமதிகளுக்கு மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் காலவரம்புடன் ஒற்றைச்சாளர அனுமதி முறையை செயல்படுத்த வேண்டும்.
- ஐ.எஸ்.எஸ்.ஆர். – படி குடிசைப்பகுதி மறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான வரைபடத்தை மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும்
- ஐ.எஸ்.எஸ்.ஆர் திட்டத்தில் பயன்படுத்தும் நிலத்தைக் குறைந்தபட்ச இடத்தோடு ஓர் ஆதார வளமாக மாற்றுவதிலும் மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும். ஐ.எஸ்.எஸ்.ஆர் திட்டங்களை சாத்தியமானதாக்குவதற்காக கூடுதல் எஃப்.ஏ.ஆர். மற்றும் ட்டி.டி.ஆர். போன்ற ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும். ஐ.எஸ்.எஸ்.ஆர். திட்டங்களில் குடிசைப்பகுதியில் வாழ்வோரை மறு குடியமர்த்தும் போது வாடகை வசதி அளிக்கப்படவேண்டும் .
- கட்டுப்படியாகும் வீட்டுவசதித் திட்ட அமலாக்கத்தை எளிதாக்க நிலம் கிடைப்பதை உறுதி செய்ய நிலம் பற்றிய தகவல் தொகுப்பை மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் தயாரிக்க வேண்டும்
- மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் தங்களின் மாநிலக் கொள்கைகளை புதிய 8 தனியார் துறை, பொதுத்துறை, பங்களிப்பு மாதிரிகளோடு இணைத்துக் கொள்ளலாம். கட்டுப்படியாகும் வீட்டுவசதியை மேம்படுத்த பொருத்தமான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சி.எல்.எஸ்.எஸ் திட்டத்தை விரிவுபடுத்த மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் நவீன உத்திகளை உருவாக்க வேண்டும். (எம்.ஐ.ஜி – Iக்கு 120 ச.மீ, எம்.ஐ.ஜி – IIக்கு 150 ச.மீ என) சி.எல்.எஸ்.எஸ்-ல் எம்.ஐ.ஜி மனைப்பரப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பிரிவுக்கான தேவை பெருமளவு கூடியிருக்கிறது. எனவே ஆசிரியர்கள் , அங்கன்வாடி ஊழியர்கள், துணை ராணுவப்படையினர், மாநில காவல் துறையினர் போன்ற குறிப்பிட்ட வகையினரை மாநிலங்கள் இலக்காக்க வேண்டும். சி.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க எஸ்.எல்.பி.சி.க்கள் மற்றும் டி.எல்.பி.சி.க்களுடன் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
- நவீன, நீடிக்கவல்ல சுற்றுச்சூழலுக்கேற்ற, பேரிடர்களைத் தாங்க வல்லவையாக 16 மாற்றுத் தொழில்நுட்பங்களுக்கு மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் ஏற்பளிக்க வேண்டும் இவற்றில் 7 தொழில்நுட்பங்களுக்கான எஸ்.ஓ.ஆர். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ஏ.எச்.பி, ஐ.எஸ்.எஸ்.ஆர் திட்டங்களின் கீழ் விரைந்தும் தரமாகவும் வீடுகள் கட்டுவதற்கு இந்தத் தொழில் நுட்பங்களை ஏற்பதற்கு மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.
- பெருமளவிலான வீட்டுவசதித் திட்டங்களுக்குப் பொருத்தமான சிறந்த தொழில்நுட்பங்களை உலக அளவில் அடையாளம் காண உலக வீட்டுவசதி கட்டுமானத் தொழில்நுட்ப அமைப்பைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அனைத்துத் தொழில் முனைவோருக்கும் தொழில்நுட்பம் அளிப்போருக்கும் நிறுவனங்களுக்கும், கல்வியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் இந்தியாவின் எதிர்கால வீட்டுவசதி மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்ய உலக அளவில் அழைப்பு விடுப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. முன்னேற்றப்பாதையில் செல்ல பொருத்தமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கவும் அடையாளம் காணவும் பிராந்திய / மாநில அளவில் தொழில்நுட்பங்களின் செயல் முறை விளக்க நிகழ்ச்சிகளை நடத்த அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
குடிசைவாழ் மக்கள் உட்பட நகர்ப்புற ஏழைகளில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் வீட்டு வசதி (நகர்ப்புறம்) திட்டத்தை (பி.எம்.ஏ.ஒய்.(யூ)) வை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை நடத்தப்பட்ட நகர்ப்புற ஆய்வு இயக்கங்களிலிருந்து சுமார் 1.2 கோடி வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிப்பதென்ற அரசின் தொலை நோக்குத் திட்டத்திற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பங்கு மிக முக்கியமானது. 2015, ஜுன் 25ல் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தத் திட்டத்தின் அனைத்து வகைகளிலும் மொத்தம் 30.81 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு பி.எம்.ஏ.ஒய் (யூ) வின் கீழ் மத்திய உதவியை விடுவிக்க இந்திய அரசு ஒப்புக் கொண்டது. தற்போது 15.65 லட்சம் வீடுகள் கட்டும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இவற்றில் 4.13 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் ஏ.எச்.பி / ஐ.எஸ்.எஸ்.ஆர் திட்டங்களை செயல்படுத்தும் போதும் திட்டமிடும் போதும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரச்சனைகளையும் கவலைகளையும் புரிந்து கொள்வது களைய வழிகாண்பது பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள ஏ.எச்.பி / ஐ.எஸ்எஸ்ஆர் திட்டங்களின் வெற்றிகரமான மாதிரிகளை அறிந்து கொள்வது, கட்டுப்படியான விலையில் வீட்டு வசதியை மேம்படுத்துவதில் தனியார் துறைபங்கேற்பைச் ஊக்கப்படுத்த ஏச்பிக்கு எப்படிப்பட்ட PPP மாதிரிகளைப் பயன்படுத்துவது, என விவாதிப்பது ; பிஎம்ஏஒய் (யூ)வின் கீழான எஎச்பி/ யூபிக்களிலிருந்து அறிந்து கொள்வது போன்றவை இந்தப் பயிலரங்கின் நோக்கங்களாகும்.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிடையே உள்ள மாறுபட்ட தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக, ஐஎஸ்எஸ்ஆர் மற்றும் ஏஎச்பி திட்டங்களை நன்றாக செயல்படுத்தியுள்ள, அரசின் தொலை நோக்க மற்றும் கொள்கை மாதிரிகளைப் பிரதிபலிக்கிற குஜராத், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் செயல் விளக்கங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த இரண்டு வகைகளின் கீழான திட்டங்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய நீண்ட காலத் திட்டமிடலில் சமூக பொருளாதார, நிதி மற்றும் பொறியியல் அம்சங்களின் முக்கியத்துவத்தை செயல்முறை விளக்கமளித்த மாநிலங்கள் வலியுறுத்தின. கட்டுப்படியாகும் செலவில் வீட்டுவசதி என்பதற்கான தனியார் துறையின் தன்மைபற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு கட்டிடத் தொழில் சங்கள்களின் இணையம் (CREDAI) மற்றும் தேசிய கட்டிடச் சொத்து மேம்பாட்டுச் சபை (NAREDCO) தலைமையேற்றன. தனியார் துறையினரும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் இணைந்து ஆலோசனை நடத்தியதிலிருந்து கற்றவையும் ஆய்வுகளும், ஏஎச்பி/ஐஎஸ்எஸ்ஆர் திட்டங்களுக்கு நீண்டகால அமலாக்க உத்திகளை உருவாக்குவதற்கு மாநிலங்களுக்கும் / யூனியன் பிரதேசங்களும் ஊக்கம் அளிப்பதாக இருந்தன.
(Release ID: 1511695)
Visitor Counter : 140