குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாம் என்றும் நம் தாய் மொழியை மதித்து பாதுகாத்து பரப்புதல் வேண்டும் : குடியரசுத் துணை தலைவர்
அசாம் சாகித்ய சபாவின் நூற்றாண்டு விழாவினை துவக்கிவைத்து உரை
Posted On:
30 NOV 2017 2:20PM by PIB Chennai
தாய்மொழிகள், சொந்த மற்றும் உள்நாட்டு மொழிகளை நாம் என்றும் மதித்து பாதுகாத்து பரப்ப வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் திரு. வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அசாம் சாகித்ய சபாவின் நூற்றாண்டு விழாவினை துவக்கிவைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஒரு தேசத்தின் கலாச்சாரம் அந்த நாட்டு மக்களின் இதயங்களிலும் உணர்வுகளிலும் தான் வாழ்கிறது” என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குடியரசுத் துணை தலைவர் சுட்டி காட்டினார். அதேபோல், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் வளமான கற்பனையை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தின் உண்மைகளையும் இலக்கியம் பிரதிபலிக்கிறது. சமூக முறைகள், கலாச்சாரம், தீமைகள் மற்றும் சமூகத்தின் நல்லது என அனைத்திற்கும் அது கண்ணாடியாக விளங்குகிறது.
அசாம் சாகித்ய சபா துவங்கியதில் இருந்து இதுவரை 10,000 நூல்களை வெளியிடுள்ளதற்கும் மேலும், ‘சந்திரகாந்த் அபிதான்’ எனும் அசாம் அகராதியின் வெளியீட்டில் முக்கிய பங்கு வகித்ததற்கும் குடியரசுத் துணைத் தலைவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு சமூகத்தினரின் கலாச்சார சிறப்பியல்புகள் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தவேண்டும் என்ற லட்ச்சியத்தொடு செயல்படும் அசாம் கலாச்சார பல்கலைக்கழகத்தை துவக்க அசாம் சாகித்ய சபா மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் துணை தலைவர் கூறினார். ‘அசாம் எழுத்தாளர்களின் கலைக்களஞ்சியம்’ மற்றும் ‘அசாமின் தேயிலை மற்றும் தேயிலை தொட்ட சமூகத்தின் கலைக்களஞ்சியம்’ ஆகியவற்றை உருவாக்க சபா மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் குடியரசுத் துணை தலைவர் பாராட்டினார்.
****
(Release ID: 1511675)