மத்திய பணியாளர் தேர்வாணையம்

திருமதி. ஸ்மிதா நாகராஜ் யு.பி.எஸ்.சி உறுப்பினராகப் பொறுப்பேற்பு

Posted On: 01 DEC 2017 1:57PM by PIB Chennai

திருமதி.ஸ்மிதா நாகராஜ் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் உறுப்பினராக டிசம்பர் 1-ம் தேதி பதவிப்பிரமாணமும் ,ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். தேர்வாணையத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் ஆர். சியேம்லி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திருமதி நாகராஜ், 1984-ம் ஆண்டு தமிழ்நாட்டுத் தொகுப்பு ஐ..எஸ் அதிகாரியாவார். கடந்த 33 ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுப் பணியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். மத்திய சமூக நல வாரியத்தின் நிர்வாக இயக்குநர், பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர், பாதுகாப்பு அமைச்சகத்தில் இணைச் செயலர் ஆகிய பொறுப்புகளை அவர் வகித்திருக்கிறார். இந்தப்பொறுப்பில் சேருவதற்கு முன்பு , பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் ( கொள்முதல்) பணியில் அவர் இருந்தார். மாநிலத்தில், எரிசக்தி,நிதி,சுகாதாரம், சிறு தொழில் துறைகளில் முக்கிய பொறுப்புகளில் அவர் பணியாற்றியவர்.

*****



(Release ID: 1511665) Visitor Counter : 153


Read this release in: English