நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்துஸ்தான் காய்கறி எண்ணெய்க் கழக நிறுவனத்திற்கு சொந்தமான நில சொத்துகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு வகைமாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 NOV 2017 7:02PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்துஸ்தான் காய்கறி எண்ணெய்க் கழக நிறுவனத்திற்கு (எச்.வி.ஓ.சி.) சொந்தமான அனைத்து நில சொத்துகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு (MoHUA) அல்லது அதன் அத்தாட்சி தரப்பட்ட முகமைக்கு, உரிய வகையில் பயன்பாட்டுக்கு/ வெளியில் வழங்குவதற்காக வகைமாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எச்.வி.ஓ.சி. -யின் நில சொத்துகளை மாற்றம் செய்வதன் மூலமாக, மத்திய அரசிடம் இருந்து எச்.வி.ஓ.சி.-க்காக பெறப்பட்ட கடன்கள், வட்டியுடன் சேர்த்து முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பல்வேறு நீதிமன்றங்கள் / டிரிபியூனல்கள்/ ஆணையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக எதிர்காலத்தில் எச்.வி.ஓ.சி.-க்கு ஏற்படும் வருங்கால கடப்பாடுகளுக்கும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

ஏழு நகரங்களில் உள்ள நிலங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. MoHUA-வுக்கு சொத்துகளை மாற்றுவதால், பொது தேவைகளுக்காக நிலத்தை பயன்படுத்த முடியும். நலிவுற்ற பொதுத் துறை நிறுவனமாக கலைக்கப்படும் நிலையில் உள்ள, எச்.வி.ஓ.சி. நிறுவனத்தை சீக்கிரத்தில் மூடுவதை இது விரைவுபடுத்தும்.
 



(Release ID: 1511475) Visitor Counter : 105


Read this release in: English