நிதி அமைச்சகம்

இந்தியா மற்றும் பிரேசில் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 30 NOV 2017 7:12PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் பிரேசில் இடையே முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்த ஒப்பந்தம் (ICFT) கையெழுத்திடவும், பின்னேற்பு அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடுகள் வருவதை அதிகரிப்பதாக இந்த ஒப்பந்தம் இருக்கும். இந்தியாவில் உள்ள பிரேசில் முதலீட்டாளர்களுக்கும், பிரேசிலில் இருக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் உரிய உதவிகளைச் செய்வதாக இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான ICFT இருக்கும். சம வாய்ப்பு அளித்தல் மற்றும் அனைத்து முதலீட்டு ஊக்குவிப்பு விஷயங்களிலும் பாரபட்சமற்ற வசதி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, சவுகரிய நிலையை மேம்படுத்துவதாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீட்டு நிலையை அளிக்க முடியும் என்றும் கருதப்படுகிறது. பிரேசில் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இந்தியாவை, விரும்பத்தக்க வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) நாடாக முன்னிறுத்துவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
 



(Release ID: 1511472) Visitor Counter : 98


Read this release in: English , Kannada