பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்களுக்கு ஜி எஸ் டி தனி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது : டாக்டர் ஜித்தேந்திர சிங்
Posted On:
09 JUL 2017 2:49PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்கள் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர், (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் ஜம்மு காஷ்மீர் மற்றும் எட்டு வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி தனி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இக்கருத்து உத்திரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
இன்று நைனிடாலில் ஊடகத்தாருக்கு அளித்த ஆதரவு உரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அவை சமநிலையில் இயங்குவதற்கான தளத்தை ஜிஎஸ்டி அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று சொன்னார். இந்த நடுநிலையான நல்ல திட்டம் வளர்ச்சி அடைய மற்றும் தொழிலில் வல்ல மாநிலங்கள் வளர்ச்சி குன்றிய பெரும்பாலாக நுகரும் நிலையில் உள்ள மாநிலங்களின் பொருளாதார
எழுச்சிக்கு உதவும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
ஜிஎஸ்டி வெளிவந்த சமயம் , டாக்டர் ஜித்தேந்திர சிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அப்பகுதியைச் சேர்ந்த சில பொருள்கள் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் முன்பு வரிவிதிப்புக்கு இலக்கு ஆகாதவை வரிவிதிப்புக்கு உட்பட்டன என்று அவர் உணர்ந்துகொண்டதாக சொன்னார். இருப்பினும் , அப்பகுதி வணிகர்களுக்கு கச்சாப்பொருளுக்கான வரி முதலியன கண்ணுக்குத் தெரியாத ஒட்டிக்கொண்டுள்ள வரிகளாக இருந்தன என்றும் ஜிஎஸ்டி கண்ணுக்குத்தெரிகிற ஒரு நேர்முக வரி என்றும் வரிவிதிப்பின் விளைவு முன்பும் இப்போதும் ஒன்றாகவே இருந்தாலும் இப்போதுள்ள ஒரே வேறுபாடு அது கண்னுக்குத் தெரிவது தான் என்றும் விளக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இந்த ஜிஎஸ்டி அமுலாக்கம் பற்றிய ஒரு முடிவு
என்றும் நிலைத்திருக்கும் பெரிய சுய மதிப்பு உணர்வு உயர்வை ஏற்படுத்தி மற்றும் நாட்டின் சமுதாய பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கை உறுதிசெய்துள்ளது. அவர் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் முயற்சியை தொழில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மாநிலங்கள் மத்திய அரசின் உதவியைப் ஈடாக பெறுவதற்கு ஏற்ற கட்டளைவிதியை அமைத்துக்கொடுத்தற்கும் மற்றும் தொழில் உற்பத்தி இல்லாத மாநிலங்களுடன் தாங்கள் சமமாக வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற காழ்ப்பு உணர்ச்சிக்கு இடமில்லாமல் இருப்பதற்கேற்ற நிலையை ஏற்படுத்தியதற்காகவும் வெகுவாக பாராட்டினார்.
ஜிஎஸ்டி இன்று உலகளவில் முக்கியம் ஏனெனில் எந்த நாடும் தனிமையில் இயங்கி பொருளாதார முன்னேற்றம் காணமுடியாது என்று டாக்டர் ஜிட்டேந்திர சிங் சொன்னார்.
(Release ID: 1511441)
Visitor Counter : 65