சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வாழ்க்கை முறை நோய்கள்

Posted On: 28 JUL 2017 7:13PM by PIB Chennai

நீரிழிவு நோயாளிகளின் துல்லியமான எண்ணிக்கையை உறுதி செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் – நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதி மக்களிடையே ஐசிஎம்ஆர் இந்தியா பி என்ற பெயரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஓர் ஆய்வை நடத்தி வருகிறது. 15 மாநிலங்களில் இதுவரை ஆய்வு நடந்துள்ளது. நீரிழிவு நோயின் கடுமை பீகாரில் 4.3% என்பதிலிருந்து சண்டிகரில் 13.6% என்பது வரை வேறுபடுகிறது.

     சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு (ஐடிஎஃப்: 6வது வெளியீடு  2013) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2013 –ல் இந்தியாவின் நகர்ப்புறப் பகுதியில் (20-79 வயதில்) 30.5 மில்லியன் பேர் நீரிழிவு நோயுள்ளவர்களாக இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வுகளின்படி நகர்ப்புறத்தில் 8-10 சதவீதமும் கிராமப் பகுதியில் 3-4 சதவீதமும் இதயநோய் (சிஎச்டி) இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சிலின் தற்போதைய மதிப்பீடு தெரிவிக்கிறது.

     ஐசிஎம்ஆர் மதிப்பீட்டுத் தகவலின்படி இந்தியாவில் புற்றுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2013, 2014, 2015 –களில் முறையே 2934314, 3016628, 3101467 ஆக இருந்தது.

     கடுமையான சிறுநீரக நோய் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இருப்பினும் சிறிதளவு மக்கள் தொகை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி வட இந்தியாவில் 0.79% ஆகவும் தென்னிந்தியாவில் 0.16% ஆகவும் அது மதிப்பிடப்பட்டிருந்தது.

     பெங்களூருவில் உள்ள நோய் தகவல் சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்சிடிஐஆர்) மருத்துவ மனையை நடத்தி வருகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான புற்றுநோய்ப் பதிகளையும் கொண்டுள்ளது. ஐசிஎம்ஆர் தகவலின்படி என்சிடி –க்கள் பற்றிய சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. நாட்பட நீடிக்கும் நோய்களால் ஏற்படும் சுமை மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் தொடர்புடைய ஆபத்து அம்சங்கள் (பிஓடி-என்சிடி) பற்றிய ஆய்வு ஐசிஎம்ஆர் –க்கு நடத்தப்பட்டு வருகிறது.

     ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்புக் குறைவு, தீங்கு விளைவிக்கும் குடிப்பழக்கம், கூடுதல் எடை, தொப்பை, புகையிலைப் பயன்பாடு போன்றவை வாழ்க்கை முறை நோய்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும். பொது சுகாதாரம் என்பது மாநில விவகாரம் என்றாலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் திட்ட அமலாக்க வரைவுகளில் (பிஐபி) முன்வைக்கப்படும் தேவைகள் அடிப்படையில் பொதுசுகாதார வசதிகளை உருவாக்குதல் / மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார முறைகளை வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்கப்படுகிறது.

     தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவில் தலையீடுகள் செய்து, புற்று நோய், நீரிழிவு நோய், இதய நாளங்கள் தொடர்பான நோய், பக்கவாதம் (என்பிசிடிஎஸ்) போன்றவற்றைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேசிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மாவட்ட மருத்துவ மனைகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் (சிஎச்சி) என்சிடி கிளினிக்குகளை அமைப்பதன் மூலம் என்பிசிடிசிஎஸ் நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய சுகாதார வசதிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது. தீவிரமான சிறுநீரக நோய்களில் தலையீடும் முறையான பராமரிப்புக்காக என்பிசிடிசிஎஸ் –களில் சேர்க்கப்பட்டுள்ளது.

     தற்போதைய ஆரம்ப சுகாதார முறையில் உள்ள முன்னணி ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுத்தி நீரிழிவு, உயர் அழுத்தம், பரவலாக ஏற்படும் புற்று நோய்கள் (வாய், மார்பகம், கருப்பை) போன்ற நாட்பட நீடிக்கும் நோய்களை முன் கூட்டியே அறிவதற்கு மக்கள் தொகை அடிப்படையிலான முன்முயற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுவான நாட்பட நீடிக்கும் நோய்களில் உள்ள ஆபத்தான  தன்மைகள் பற்றி இந்த நடைமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

     புற்று நோய்க்கான மூன்றாம்நிலை கவனிப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலப் புற்று நோய் மையங்களை அமைக்கவும் மேம்படுத்தவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையங்களை உருவாக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது. பிரதம மந்திரியின் தேசிய டயலிசிஸ் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்குக் கட்டணமின்றி டயலிசிஸ் மருத்துவம் செய்ய மாநிலங்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் உதவி வழங்கப்படுகிறது.

     சுகாதார சேவைகள் வழங்குவதற்கான மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தனது மருத்துவ மனைகள் மூலம் ஒத்துழைப்பு அளிக்கிறது. பிரதம மந்திரியின் ஸ்வாத்யா சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) –வின் கீழ் 6 புதிய ஏஐஎம்எம்எஸ் அமைக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, இவை சுகாதார வசதிகளை மேம்படுத்தும்.

     மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி. அனுப்ரியா படேல் மக்களவையில் எடுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

*****


(Release ID: 1511435) Visitor Counter : 111
Read this release in: English