சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்பட நீடிக்கும் நோய்கள்

Posted On: 28 JUL 2017 7:15PM by PIB Chennai

நாட்பட நீடிக்கும் நோய்களால் அதிகரித்துவரும் (நிதிச்) சுமையை அங்கீகரித்துள்ள தேசிய சுகாதாரக் கொள்கை (என்பிஎச்) 2017, கடுமையான நோய்களால் அதிகரிக்கும் (மரண) சம்பவங்களை நிறுத்தவும் குறைக்கவுமான ஆலோசனைகளையும் தெரிவிக்கிறது. முதியோர் ஆரோக்கிய கவனிப்பு, நாட்பட நீடிக்கும் நோயுற்றோர் கவனிப்பு, மறுவாழ்வு கவனிப்பு சேவைகள் உட்பட மிகவும் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து விரிவானது வரையிலான ஆரம்ப சுகாதார திட்டத்தில் முக்கியமான மாற்றங்களை இந்தக் கொள்கை குறிப்பிடுகிறது.

     2014 நவம்பரில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார அமைப்பு மற்றும் பொது சுகாதாரம் பற்றிய ஹார்வர்ட் பள்ளியின் அறிக்கையில் நாட்பட நீடிக்கும் நோய்கள் (என்சிடிஎஸ்) மற்றும் மனநல நிலைமைகளால் இந்தியாவுக்கு 2030 –க்கு முன்னால் 4.58 டிரிலியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

     பொது சுகாதாரம் என்பது மாநில விவகாரம் எனறாலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திட்ட அமலாக்க வரைவுகளில் (பிஐபி) முன்வைக்கப்படும் தேவைகள் அடிப்படையில் பொது சுகாதார வசதிகளை உருவாக்குதல் / மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார முறைகளை வலுப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சங்கங்களுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்கப்படுகிறது.

     தேசிய இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவில் தலையீடுகள் செய்து புற்றுநோய் நீரிழவு நோய், இதய நாளங்கள் தொடர்பான நோய், பக்கவாதம் (என்பிசிடிசிஎஸ்) போன்றவற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தேசிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. மாவட்ட மருத்துவ மனைகள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் (சிஎச்சி) என்சிடி கிளினிக்குகளை அமைப்பதன் மூலம் என்பிசிடிசிஎஸ் நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகிய சுகாதார வசதிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.

     தற்போதைய ஆரம்ப சுகாதார முறையில் உள்ள முன்னனி ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் சேவைகளைப் பயன்படுத்தி நீரிழிவு, உயர் அழுத்தம், பரவலாக ஏற்படும் புற்றுநோய்கள் (வாய், மார்பகம், கருப்பை) போன்ற நாட்பட நீடிக்கும் நோய்களை முன் கூட்டியே அறிவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் முன்முயற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுவான நாட்பட நீடிக்கும் நோய்களில் உள்ள ஆபத்தான தன்மைகள் பற்றி இந்த நடைமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கான மூன்றாம் நிலை கவனிப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலப் புற்றுநோய் மையங்களை அமைக்கவும் மேம்படுத்தவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்றாம் நிலை புற்றுநோய் மையங்களை உருவாக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது.

     மாவட்ட மருத்துவமனை அளவிலும் மாவட்ட மனநல சுகாதாரத் திட்டக் (டிஎம்எச்பி) குழுக்களின் தீவிர செயல்பாடுகள் மூலம் ஊரகப் பகுதிகளிலும் மனப்பிறழ்வுகள் / மனநோய் ஆகியவற்றைக் கண்டறிதல், நிர்வகித்தல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை நாட்டின் 339 மாவட்டங்களில் டிஎம்எச்பி –களில் அமல்படுத்தவும் மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. இது தவிர, அடிப்படை மன நல சேவைகளைச் செய்வதற்கு ஆரம்ப சுகாதார மையம் (பிஎச்சி) சமூக சுகாதார மைய (சிஎச்சி) நிலைகளில் ஊழியர்கள் நியமனத்திற்கும் கூட மத்திய அரசு உதவி செய்கிறது. இன்னும் கூடுதலாக, பொது சுகாதார சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அடிப்படை மனநல சேவைகளை வழங்குவதற்காக மாவட்ட மருத்துவமனை, சிஎச்சி, பிஎச்சி ஆகியவற்றின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு உதவி செய்கிறது.

     சுகாதார சேவைகள் வழங்குவதற்கான மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தனது மருத்துவமனைகள் மூலம் ஒத்துழைப்பு அளிக்கிறது. பிரதம மந்திரியின் ஸ்வாத்ய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) வின் கீழ் 6 புதிய ஏஐஎம்எம்எஸ் அமைக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவை சுகாதார வசதிகளை மேம்படுத்தும்.

                மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

******



(Release ID: 1511433) Visitor Counter : 67


Read this release in: English