தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தை ரூ. 6.6 டிரில்லியன் இலக்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - மனோஜ் சின்ஹா

Posted On: 02 AUG 2017 3:09PM by PIB Chennai

குரல்மையச் சந்தையிலிருந்து தகவல்மையச் சந்தைக்கு மாறி இந்தியத் தொலைத்தொடர்புத் துறை ஒரு முன்மாதிரியான மாற்றத்தைக் கண்டிருக்கிறது என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா இன்று கூறியுள்ளார். குரல்வியாபாரம் இன்னும் பெரிய அளவுக்கு வருவாயை ஈட்டித்தருகிறது என்னும் நிலையிலும், தகவல்வருமானம் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றார் அமைச்சர். தகவல் தொடர்பில் இந்தியா என்னும் பயிலரங்கு ஒன்றில் பேசுகையில், “ 2016 இறுதிவரை இணையச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 391.50 மில்லியன் ஆக இருந்ததால் உலகில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுஎன்றார்.

2016 இல் கைபேசி எண்ணிக்கையும் 76 சதவிகித அளவுக்கு உயர்ந்து திறன்பேசி ( ஸ்மார்ட் ஃபோன் ) வருகைக்கும் அது வழிவகுத்தது என்றார் அமைச்சர். இந்த அதிகரித்த ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு குறிப்பாக நகரப் பகுதிகளில்கைபேசிகளிலும் கைகளில் வைத்திருக்கும் இதர கருவிகளிலும் இணையத்தின் பயன்பாட்டை 2016 இல் அதிகரிக்கச் செய்தது. சராசரியாக , ஸ்மார்ட் ஃபோன் ஒன்றின் மூலம் மாதம் ஒன்றுக்கு, 2015 இல் 430 மெகாபைட் ஆக இருந்த நிலையிலிருந்து உயர்ந்து, 559 மெகாபைட் மொபைல் தரவு உருவானது. 2016 இல் கைபேசியில் காணொளியைப்        ( வீடியோ ) பயன்படுத்துதல் 49 சதவிகிதமாக இருந்த நிலையிலிருந்து உயர்ந்து 2021 ஆம் ஆண்டு 75 சதவிகிதமாக ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹெல்த் மானிட்டர்கள், ஸ்மார்ட் டிரான்ஸ்போர்ட், ஸ்மார்ட் மீட்டர்கள் போன்று தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள புதுமையான முன்னேற்றங்கள் எம்2எம் சேவைகளில் 21 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த முன்னேற்றங்கள் கைபேசித் தரவுகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தகவல் தொடர்புத் துறை மேலும் புதிய தொழில்நுட்பங்களை நோக்கிச் செல்லும் என்றும் அமைச்சர் கூறினார். இந்தத் தரவு வாய்ப்பைக் கண்காணிக்க டிஎஸ்பி க்கள் புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவது அவசியம் எனவும்  . 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தை ரூ. 6.6 டிரில்லியன் இலக்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் கூறினார்.  

இந்திய அரசு 2015 ஜூலையில்டிஜிட்டல் இந்தியா  முன்முயற்சியைத் தொடங்கியது என்றும் அது ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை முக்கியப் பயன்பாடாக அளிப்பது, தேவைப்படும் தருணங்களில் ஆட்சி நிர்வாகத்தையும் சேவையையும் வழங்குவது, குடிமக்களை டிஜிட்டல் ஆளுமை மிக்கவர்களாக ஆக்குவது என்னும் மூன்று குறிக்கோள்களைக் கொண்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திரு. சின்ஹா பேசுகையில், “ பாரத் நெட் என்பது டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியில் அமைந்த ஒன்று . அது 2018 க்குள் நாட்டில் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை அதிவிரைவு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் இணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டம் இந்தியாவில் இழைத் தளங்களை ( ஃபைபர் சைட்ஸ் ) அதிகரிக்க உதவும். முன்னேறிய பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அது தற்போது 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்தத் திட்டம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2017 ஜூலை வரை 1,00.000 கிராமப் பஞ்சாயத்துக்கள் கட்டம் – 1 மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், சத்திஸ்கர், அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 100 சதவிகிதப் பணி முடிவடைந்துவிட்டதுஎன்று குறிப்பிட்டார்.

இந்தியத் தகவல் தொடர்புத் துறையின் முக்கிய சாதனைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார் :

  • 400 மில்லியனுக்கும் மேற்பட்ட இணையப் பயனாளிகள்.
  • 2016 – 17 நிதியாண்டில் ஏறத்தாழ 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரத்து என்னும் அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

 

  • தற்போது 20 சதவிகிதத்திற்கும் மேல் டீசல் அற்ற டவர்சைட்கள் ஆக ஆக்கப்பட்டுள்ளன.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நூறு பேர்களுக்குமான கிராமப்புற தொலைபேசி இணைப்புகள் 30 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளன.
  • 3 ஜி / 4 ஜி யிலிருந்து ¾ க்கும் மேலான தரவுப் பயன்பாடு.
  • 4 மில்லியனுக்கும் மேற்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளைத் தகவல் தொடர்புத் துறை உருவாக்குகிறது.
  • 2015 லிருந்து எல்டிஇ டிவைஸ் இக்கொ  சிஸ்டம் 270 சதவிகித அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
  • 2015 செப்டம்பர் முதல் 38 புதிய கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • ஜூன் 2017 இல்ஸ்மார்ட் சிட்டிசெயல்திட்டத்தில் 30 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு, மொத்த ஸ்மார்ட் சிட்டிகளின் எண்ணிக்கை 90 ஆக ஆக்கப்பட்டுள்ளது.
  • 54,000 தொலைத்தொடர்பற்ற கிராமங்களை இணைப்பதற்கு அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. உரிய அறிக்கை அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்ட பின்பு, அரசு தனது முயற்சிகளை விரைவுப்படுத்தும்.
  • தகவல் தொடர்புத்துறையின் பொருளாதார ஆரோக்கிய நிலையை அமைச்சகங்களுக்கூடான குழு ஒன்று கவனிக்கிறது.

 

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொடர்புத் துறைச் செயலாளர் திரு. அருணா சுந்தரராஜன் கலந்துகொண்டு பேசுகையில்பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குக்கு ஏற்ப, வளர்ச்சிக்கான ஒரு புதிய செயல்திட்டம் வகுக்கப்பட உள்ளதுஎன்றார். புதிய தகவல் தொடர்புக்கொள்கையானது வளர்ச்சி இலக்கைத்  தற்போதைய 7.6 சதவிகிதத்திலிருந்து 10  சதவிகிதமாக ஆக்குவதற்கான முக்கிய அம்சமாக உள்ளது என்றும் தகவல் தொடர்புத் துறையும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.5 சதவிகிதம் பங்களித்திருக்கிறது என்றும் அது 25 சதவிகிதமாக உயர மகத்தான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



(Release ID: 1511429) Visitor Counter : 186


Read this release in: English