சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஹைதராபாத் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட மேம்பாட்டு முகாமில் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி உரை

Posted On: 05 OCT 2017 12:13PM by PIB Chennai

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்ட மேம்பாட்டு முகாமில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டு உரையாற்றினார். முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 8, 2015 முதல் இதுவரை 9.13 கோடி ரூபாய் கடன் தொகைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் திரு. நக்வி தொடர்ந்து பேசுகையில், முத்ரா யோஜனா திட்டத்தில் 76 சதவீதம் பெண்கள் பயன் அடைந்திருக்கிறார்கள் என்றும், 55 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்றும் தெரிவித்தார்.

திரு. நக்வி மேலும் பேசுகையில், உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான, உறுதியான நாடாக இன்று இந்தியா விளங்குகிறது என்றும் தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தியுள்ளது. அதனால் கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

திரு. நக்வி தொடர்ந்து பேசுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டது. பயனாளிகளுக்கு ஆதாயம் நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படுவதால் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்துடன் இணைந்த ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற பல்வேறு நலத் திட்டங்களுக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் மக்களுக்கு பல்வேறு வகையில் கடன் வழங்கப்படுவதாக திரு. நக்வி தெரிவித்தார். ஆரம்ப கட்டத்திலான சிசு வகையினருக்கு ரூ.50 ஆயிரம், அடுத்த கட்டத்திலான கிஷோர் வகையினருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம், வளர்ச்சியடைந்த தருண் வகையினருக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

*****



(Release ID: 1511423) Visitor Counter : 109


Read this release in: English