சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலா அமைச்சகம் நாடெங்கும் தொடங்கிய, ‘பர்யதன் பாவ்’

Posted On: 05 OCT 2017 1:10PM by PIB Chennai

இன்று நாடு முழுவதும், ‘பர்யதன் பாவ்’ (உல்லாச பிரயாணம்) திட்டம் சுற்றுலா அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இன்று இந்தத் திட்டத்தை புது டெல்லியில் உள்ள ஹியூமான் கோட்டையில், மத்திய கலாச்சாரத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா, திரு.அல்போன்ஸ் கண்ணன்தணம் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து வித்யா ஷா வழங்கிய மீரா பஜன், டாக்டர் சையதா ஹமீது, ஷக்கியா ஷகீர், ரேனே சிங் ஆகியோர் வழங்கிய தாஸ்டன் அமிர் குரஸ் ஆகிய கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

அக்டோபர் 23 முதல் 25 வரையிலான மூன்று நாட்கள் இந்தபர்யதன் பாவ்விழா கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற விழாவில், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து கலாச்சார நிகழ்ச்சிகள், கலைப் பொருட்கள் விற்பனை, உணவுத் திருவிழா, கிராமப்புற மற்றும் பாரம்பரிய நடனம், இசை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றன

மத்திய அமைச்சகம், மாநில அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் இந்த, ‘பர்யதன் பாவ்திட்டத்தை நாடு முழுவதும் அக்டோபர் 5 முதல் 25 வரை நடத்துகிறது. சுற்றுலாத் துறை மீது கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நமது நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை பறை சாற்றுவதுடன், ‘எல்லோருக்கும் சுற்றுலாஎன்ற கோஷமும் முன்வைக்கப் படுகிறது.

பர்யதன் பாவ்திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் :

1. உன் தேச தரிசனம் (டேக்கோ ஆப்னா தேஷ்) :

உள்நாட்டு சுற்றுலாவை இந்தியர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். சுற்றுலா பயணங்களில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள், புகைப்படங்கள், வலைப்பதிவு போட்டிகள், சுற்றுலாவாசிகள் பார்வையில் இந்தியாவை பற்றி இணையத்தில் எழுதப்படும் கதைகள், சுற்றுலா தொடர்பான வினாடிவினா, கட்டுரைகள், கலந்துரையாடல், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி போன்றவை நடத்தப்படுவதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் சுற்றுலா செல்வதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

2. எல்லோருக்கும் சுற்றுலா :

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். சுற்றுலா தலம் மற்றும் சுற்றியுள்ள இடங்களை அலங்கரித்தல், கலாச்சார நடனம், இசை, நாடகம், கதை சொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளை ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படும். மேலும் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுற்றுலா கண்காட்சி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை, பாரம்பரிய நடைப் பயணம் போன்றவை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெருமளவு மக்கள் பங்களிப்புடன் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

 

  1. சுற்றுலா மற்றும் மேலாண்மை :

பல்வேறு கருப்பொருட்களுடன் தன்னார்வலர்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.

  • சுற்றுலாத் துறையில் திறன் மேம்பாடு
  • சுற்றுலாவில் புதுமை
  • வாடகை ஊர்தி ஓட்டுனர்களாக முன்னாள் படை வீரர்களை நியமனம் செய்து, சீரிய சேவை வழங்குதல்.
  • குறிப்பிட்ட இடங்களைச் சுற்றியுள்ள கிராமப்புற சுற்றுலா பிரதேச வளர்ச்சியை மேம்படுத்துதல்.
  • சமூக உணர்வை விளக்கும் வகையில், சுற்றுலாவாசிகளை வீட்டில் தங்க வைத்தல், படுக்கை மற்றும் காலை உணவு வழங்குதல் போன்றவைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.

மாநில அரசு இந்தத் திட்டத்தில் பங்குதாரராக இணைந்து, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, மாநிலங்களில் உள்ள அனைத்து தலங்களையும் அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும்.

மத்திய அமைச்சகங்களும் இந்த விழாவில் ஒரு பகுதியாக தாங்களே முன்வந்து கலந்துகொள்கின்றன.

  • கலாச்சாரத் துறை அமைச்சகம் மூலம் நடனம், இசை, நாடகம், கதை சொல்லுதல், ஓவியக் கண்காட்சியை பல்வேறு இடங்களில் நடத்துதல்தொல்லியல் துறை சின்னங்களை அலங்காரப் படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மூலம் தூர்தர்சன் தொலைக்காட்சியில் பொதுமக்களுக்கு சுற்றுலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
  • ஜவுளித் துறை அமைச்சகம் மூலம் திறமையான கலைஞர்களைக் கொண்டும், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைக் கொண்டும் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடத்தப்படும்.
  • ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற சுற்றுலா பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் உள்ளூர் நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும்.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் வினாடி வினா போட்டிகள், ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும். அத்துடன் மாணவர்களை முக்கியமான சுற்றுலா தலங்களுக்கு உல்லாச பயணம் அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு அமைச்சகம் மூலம் சுற்றுலா நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் வடகிழக்கு பிராந்தியத்தில் நடத்தப்படும்.
  • ஆயுஷ் அமைச்சகம் மூலம் யோகா கலை செயல் விளக்கம், அதற்கான பயிற்சி வகுப்பு மற்றும் கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மூலம் இளைஞர்களுக்கு முகாம் நடத்துதல், சாகச நிகழ்ச்சிகள் நடத்துதல், பழங்குடி இளைஞர் திறன் அறியும் நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படும். மேலும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் (FIFA U-17 World Cup) பங்கேற்கும் அணியினரை, அந்தந்த இடங்களில் உள்ள சிறப்பான சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வினாடி வினா, புகைப்படம், வீடியோ போன்ற போட்டிகள் நடத்துவதற்கு மத்திய அரசு பங்குதாரராக செயல்படும்
  • சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், தன்னார்வலர்கள் மூலம் ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பொறுப்பு எடுத்துக்கொள்கிறது.
  • சிவில் விமானப் போக்குவரத்து விமான நிலையங்கள் அனைத்தும் இந்தத் திட்ட நாட்களில் விழாக்கோலம் காணும் வகையில் அலங்காரம் செய்யப்படும். மேலும் விமான நிலைய ஊழியர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மூலம் சுற்றுலா தலத்தை அடையாளப்படுத்தும் வகையில் சாலையோர அறிவிப்பு பலகைகள் நிறுவப்படும்.
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் பெட்ரோல் நிலையங்களில், சுற்றுலா தலங்களுக்கான வழிகாட்டல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • நிதி அமைச்சகம் (வருவாய்) சார்பில், சுங்கத் துறை அதிகாரிகளுக்கு விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்..
  • உள் துறை அமைச்சகத்தின் சார்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் குடியேற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழில் கொள்கை மேம்பாட்டுத் துறையின் மூலம் இந்திய மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பங்களிப்புடன் வட்ட மேஜை கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்படும்.

உலகளாவிய சந்தையை கணக்கில் கொண்டு, வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், இந்திய தூதரங்கள் மூலம் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக இதுவரை இந்தியாவுக்கு வராத, இந்திய வம்சாவளியினர் இங்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுலா அமைச்சகம் மூலம், ‘பாரம்பரிய அடையாளத்தை ஏற்றுக்கொள்ளுதல்என்ற திட்டம் இந்தக் காலகட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும். முக்கியமான இடங்களில் உள்ள சுற்றுலா தலத்தை அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இதுதவிர, கலாச்சார அமைப்புகள்நிறுவனங்கள். போக்குவரத்து மற்றும் சேவை தொழில் நிறுவனங்கள், விடுதி மேலாண்மை நிறுவனங்கள், இந்திய சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவனங்கள், சேவை வழங்குபவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த மாபெரும் திட்டத்தில், சிறந்த முறையில் பங்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பர்யதன் பாவ்திட்டம் குறித்து அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஆதரவு அளிக்கப்படும். தூர்தர்சன் தொலைக்காட்சி மூலம் கீழ்க்கண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

  • வினாடி வினா நிகழ்ச்சி  - இந்தியா எனும் அதிசயம்
  • புன்னகை இந்தியா புன்னகைபுகைப்படப் போட்டி
  • உங்களுக்குத் தெரியுமா? – இந்தியா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி.

*******




(Release ID: 1511422) Visitor Counter : 805


Read this release in: English