பாதுகாப்பு அமைச்சகம்

குண்டு துளைக்காத ஆடைக்கான தொழில்நுட்ப பரிமாற்றம்

Posted On: 04 OCT 2017 8:24PM by PIB Chennai

இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு குண்டு துளைக்காத சட்டை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்பி.பி.ஜெ.) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகம் (டி.ஆர்.டி..), கான்பூரைச் சேர்ந்த எம்.கே.யு. லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்த தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.. தலைவரும் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயலாளருமான டாக்டர் எஸ்.கிறிஸ்டோபர் வழங்கினார். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் உரிம ஒப்பந்தங்கள் டி.ஆர்.டி.. மற்றும் எம்.கே.யு. லிமிடெட் நிறுவனங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டன.

இந்திய ராணுவத்தின் பொதுவான பணியாளர் தகுதித் தேவை (ஜி.எஸ்.கியூ.ஆர்.) எண்.1438 படி, புல்லட் புரூஃப் ஜாக்கெட் தொழில்நுட்பம் டி.ஆர்.டி.-வின் கான்பூர் பிரதான பரிசோதனைக்கூடத்தில், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் இருப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.எம்.எஸ்.ஆர்.டி..) மூலம் உருவாக்கப்பட்டதுடி.ஆர்.டி.. பயன்படுத்தும் இந்தத் தொழில்நுட்பம் இந்திய ராணுவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சவாலை உறுதி செய்யும் என்..ஜே.3 பிளஸ் (NIJ III+) தரம் கொண்ட, ஜி.எஸ்.கியூ.ஆர்.சின் பல்வேறு தயாரிப்புகளில் ஒன்றாகும்.

டாக்டர் கிறிஸ்டோபர் தனது உரையில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கான புல்லட் புரூஃப் ஆடைகளை கான்பூர், எம்.கே.யு. நிறுவனமானது டி.ஆர்.டி..வின் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டி.ஆர்.டி..யுடன் இணைந்து மிகுந்த எச்சரிக்கையுடனும் உயர்ந்த தரத்தையும் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த விழாவில் டி.ஆர்.டி.-வின் நேவல் சிஸ்டம் & மெட்டீரியல் க்ளஸ்டரின் பொது மேலாளர் டாக்டர் எஸ்.வி.காமத், கான்பூர், டி.எம்.எஸ்.ஆர்.டி.. இயக்குனர் டாக்டர் என்.ஈஸ்வர பிரசாத், எம்.கே.யு.லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஶ்ரீ நீரஜ் குப்தா மற்றும் டி.ஆர்.டி.. தலைமையகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

*****



(Release ID: 1511421) Visitor Counter : 122


Read this release in: English