சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலையில் பசுமை இயக்கம்

प्रविष्टि तिथि: 05 OCT 2017 3:00PM by PIB Chennai

இந்த பருவ மழை காலத்தில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.ஹெச்...), இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகளில் நட்டுள்ளது. இதில் 4 லட்சம் செடிகள் சாலை ஓரத்திலும் 6 லட்சம் செடிகள் நெடுஞ்சாலையின் நடுப்புற தடுப்புகளிலும் நடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் இந்த பசுமை இயக்கமானது, ‘தூய்மை இந்தியாதிட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலையை தூய்மையாக, பசுமையாக வைத்துக்கொள்வதுடன், மாசுக் கட்டுப்பாட்டையும் தடுக்கிறது. மழைக் காலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பசுமை இயக்கம் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், தொடர்ந்து செடிகளுக்கு தண்ணீர் விடுவதற்கும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், நெடுஞ்சாலையில் தூய்மை, பசுமை பாதுகாக்கப்படுவதுடன், மாசுக்கட்டுப்பாடு குறைகிறது.

*******


(रिलीज़ आईडी: 1511376) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English