குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரவேண்டும் – குடியரசு துணைத் தலைவர்
இந்தியாவின் மாநில அளவிலான நோய்த் தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கை வெளியீடு.
Posted On:
14 NOV 2017 2:52PM by PIB Chennai
மக்களின் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். இன்று, பப்ளிக் ஹெல்த் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவாலுவேஷன் (சியாட்டில் உள்ள யுனிவர்ஸிட்டி ஆஃப் வாஷிங்டன்) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தயாரித்த, இந்தியாவின் மாநில அளவிலான நோய்த் தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையை வெளியிட்டு இவ்வாறு பேசினார். இந்த விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு.ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திருமதி. அனுப்பிரியா பட்டேல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குடியரசு துணைத் தலைவர் பேசுகையில், பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சியில், நாட்டு மக்களின் உடல் நலன் சிறப்பாக பாதுகாப்பதை முக்கிய குறிக்கோளாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகபட்ச வாழ்நாள் மற்றும் குறைந்தபட்ச வாழ்நாட்களுக்கு மாநிலங்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் தற்போது 11 ஆண்டுகளாக இருக்கிறது என்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச சிசு மரண வித்தியாசம் 4 மடங்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் சுகாதார அளவீடானது, இதே அளவில் உள்ள பிற நாடுகளின் வளர்ச்சியைவிட குறைவாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். நாட்டின் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும் இன்னமும் அதிகமாக நிகழவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பாகங்களில் சில நோய்களில் காணப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து தேசிய அளவிலான ஆய்வுகளும், புள்ளிவிபரங்களும் இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இன்று வெளியான இந்தியாவின் மாநில அளவிலான நோய் தாக்கம் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையானது, 1990 முதல் 2016 வரை ஒவ்வொரு மாநிலத்தின் மதிப்பீடு பற்றி விரிவான முறையில் முதன்முதலாக சுட்டிக்காட்டியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கை மட்டுமின்றி, தொழில்நுட்ப அறிவியல் அறிக்கையும் உடல் நலத்தில் ஒவ்வொரு அரசும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும், மாநிலங்களுக்கு இடையில் சுகாதார வேற்றுமை தென்படுவதையும் மிக எளிதாக கண்டறியும் வகையில் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் தீவிர நோய்கள் உடனடியாக களையப்பட வேண்டும், அப்போதுதான் நம்முடைய அடுத்த தலைமுறையினர் தனிப்பட்ட வளர்ச்சி அடையவும், நாடு முன்னேற்றம் அடையவும் முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1511374)
Visitor Counter : 164