குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர், சில்வர் டிரம்ப்பெட் மற்றும் டிரம்ப்பெட் பேனரை, குடியரசுத் தலைவரின் மெய்காவலர் படையினருக்கு நாளை வழங்க உள்ளார்

Posted On: 16 NOV 2017 7:37PM by PIB Chennai

ராஷ்டிரபதி பவனில் நாளை (நவம்பர் 17, 2017ல்) நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவரின் மெய்காவலர் படையினருக்கு சில்வர் டிரம்ப்பெட் மற்றும் டிரம்ப்பெட் பேனரை வழங்குகிறார்.

 

குடியரசுத் தலைவரின் மெய்காவலர் படை பிரிவானது, இந்திய ராணுவத்தில் மிகப்பழமையான படைப்பிரிவாகும். 1773ல் கவர்னர் ஜெனரல் மெய்காவலர் (பிற்காலத்தில் வைஸ்ராயின் மெய்காவலர் படை) படையாக உயர்த்தப்பட்டது. குடியரசுத் தலைவரின் பிரத்யேக பாதுகாப்பு படையாக இருக்கும் இதற்கு மட்டுமே, குடியரசுத் தலைவரின் சில்வர் டிரம்ப்பெட் மற்றும் டிரம்ப்பெட் பேனரை ஏந்திச்செல்வதற்கான உரிமைபெற்ற ஒரே இந்திய ராணுவப்படை என்ற தனித்துவம் உள்ளது. இந்த பெருமை 1923ல் அப்போதைய வைஸ்ராய், லார்டு ரீடிங்கினால், 150 ஆண்டு சேவையை பாராட்டி குடியரசுத் தலைவரின் மெய்காவலர் படைக்கு வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் வந்த ஒவ்வொரு வைஸ்ராயும், சில்வர் டிரம்ப்பெட் மற்றும் டிரம்ப்பெட் பேனரை குடியரசுத் தலைவரின் மெய்காவல் படைக்கு வழங்கி வருகின்றனர்.

1950 ஜனவரி 27ல், இந்தப் படைப்பிரிவின் பெயர், குடியரசுத் தலைவரின் மெய்காவல் என்று மாற்றப்பட்டது. ஒவ்வொரு குடியரசுத் தலைவரின், இந்தப் படைப்பிரிவை பாராட்டும் வகையில், இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்த கைகளில் கோட்டை கொடுக்கும் நடைமுறையை பின்பற்றாமல், குடியரசுத் தலைவரின் மோனோகிராம் பேனரில் இடம்பெறுகிறது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத், தன்னுடைய சில்வர் டிரம்ப்பெட் மற்றும் டிரம்ப்பெட் பேனரை, குடியரசுத் தலைவரின் மெய்காவல் படைக்கு 1957 மே 14ல் வழங்கினார்.

குடியரசுத் தலைவரின் மெய்காவல் படையாக அறியப்படும் படையானது, பனாரசில் (வாரணாசி), முந்தைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹாஸ்டிங்கினால் உருவாக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் இப்படையின் பலம் 50 குதிரைப் படையினருடன் இருந்தது. பின்னர் மேலும், 50 குதிரைப்படை வீரர்கள் இணைக்கப்பட்டனர். தற்போது குடியரசுத் தலைவரின் மெய்காவல் படையானது, சிறப்பு உடல்தகுதி அம்சங்களுடன் கூடிய குறிப்பிடத்தக்க அளவு வீரர்களுடனான தேர்வு செய்யப்பட்ட அமைப்பாக உள்ளது. இவர்கள் கடுமையான மற்றும் தீவிரமான உடற்தகுதிகளுடன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குடியரசுத் தலைவரின் மெய்காவல் படை, போர்க்கால பணிகளிலும் ஈடுபடும். இதன் ஒரு பகுதி வீரர்கள் சியாச்சின் பனி மலையிலும் பணியாற்றுகின்றனர். இப்படையின் வீரர்கள், இலங்கைக்கு சென்ற இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி உள்ளதோடு, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையிலும் பங்கெடுத்துள்ளனர்.

 

*****



(Release ID: 1511369) Visitor Counter : 121


Read this release in: English