வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

இரண்டு நாள் 12-வது வட கிழக்கு மாநில வணிக உச்சி மாநாடு புதுடெல்லியில் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் எதிர்காலம் வட கிழக்கு மாநிலங்களிடம் உள்ளது – வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 16 NOV 2017 3:50PM by PIB Chennai

இரண்டு நாட்கள் நடைபெறும், ‘12வது வட கிழக்கு மாநில வணிக உச்சி மாநாடுஇன்று தொடங்கி வைக்கப்பட்டது. வட கிழக்கு பிராந்தியங்களில் உள்ள வணிக வாய்ப்புகளை வெளிப்படுத்துவதுதான் இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும். உள்கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு, திறன் மேம்பாடு, நிதி சேகரித்தல், சேவைத் துறை வளர்ச்சிகுறிப்பாக சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த உச்சி மாநாட்டை மணிப்பூர் அரசுடன் இணைந்து இந்திய வர்த்தக சம்மேளனம் (ICC) ஏற்பாடு செய்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து பேசிய வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான வணிக சாத்தியங்கள் வெளிப்படுத்தப்படாமல் உள்ளன. மறைந்திருக்கும் சாத்தியக்கூறுகளை பிராந்திய வளர்ச்சி மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஏதாவது ஒரு பகுதி மேம்பாடு அடையவில்லை என்றால் நாடு முழு அபிவிருத்தி அடைந்ததாகக் கருத முடியாது என்று சொன்னார். பிரதமர் திரு.நரேந்திரமோடி எல்லைப்புற மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் வளங்கள் முழுமையான அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன, இப்போது வட கிழக்கு மாநிலங்களின் அறியப்படாத வளங்கள் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் உத்வேகத்தை பிரதமர் நரேந்திர மோடி தருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்திய மக்கள் தொகையில் 70% பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள், இன்னமும் வெளிப்படாத இந்த பிராந்திய இளைஞர்களின் லட்சியமும், பிற பகுதியினரைப் போன்று நிறைவேற்றப்பட வேண்டும்.

அமைச்சர் பேசுகையில், வட கிழக்கு மாநில பழ உற்பத்தியில் 40%  வரை போதிய பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் வீணாகின்றன, இது தொழிலதிபர்களுக்கு சாத்தியமுள்ள துறை ஆகும். வடகிழக்கு பிராந்தியத்தில், வியாபாரம் செய்வது எளிது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் இணைப்புகளில் உள்ள பிரச்னைகள் குறித்தும் வலியுறுத்தினார். இதுவரை ரயில் இணைப்பு காணாத பகுதிகளுக்கு எல்லாம், ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தியப் பகுதியான அகர்டலாவில் இருந்து வங்காளதேசம் செல்லும் ரயில் பாதை கட்டுமாணத்திற்கு, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 19 நீர்வழித் திட்டங்கள் பூபென், ஹசாரிக்கா பாலம் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதையும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், வனத் துறையின் வசம் இருக்கும் மூங்கில் பயிரை, வளர்ந்துவரும் வணிகத் துறைக்கு மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தபால் துறையில் பாஸ்போர்ட் மண்டலம் அமைக்கப்பட்டு பிராந்திய வணிக அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் ஜிதேந்திரா சிங் பேசுகையில், பிரதம மந்திரியின், ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியாபோன்ற திட்டங்களில் ஆரம்ப கட்டங்களில் வரிச்சலுகை, வெளியேறுவதற்கு மூன்று மாத கால அனுமதி போன்ற பல்வேறு சலுகைகள் அடங்கியுள்ளன. மேலும் வட கிழக்கு பிராந்தியத்தில் புதிய தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை மூலம் ஆரம்ப கூட்டு வணிக நிதி வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வட கிழக்கு பிராந்தியம் மிகவும் உகந்தது என்ற நிலை விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

வணிக நிறுவனங்கள், வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பயன்படுத்தப்படாத வளங்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் வைத்தார். இந்தப் பிராந்தியத்தில் வணிகத்திற்கு இன்னும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இப்போது வடகிழக்கு மாநிலங்களில், ‘வீட்டுச் சுற்றுலாதிட்டம் நடைமுறையில் உள்ளன. இதனை வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் சாத்தியமாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மருத்துவ வசதி அல்லது மருத்துவர் வசதி இல்லாத தொலைதூரப் பகுதிகளில், நோயாளிக்கு மருத்துவ வசதி தேவைப்படும் பட்சத்தில், தேவைக்கு ஏற்ப ஹெலிகாப்டர் மருத்துவம் அல்லது நோயாளியை அழைத்துச்செல்தல் போன்றவை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான முதல் பரிசோதனை முயற்சி இம்ப்பால் மற்றும் ஷில்லாங் பகுதியில் செய்து முடித்துள்ளாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேபோன்ற வசதிகள் கொண்ட பிற மாநிலங்களைப் பின்பற்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வட கிழக்கு தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கையும் அமல் படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அரசு உதவியுடன் வட கிழக்கு கவுன்சில் புத்தாக்கம் பெற இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மிசோராம் மாநில ஆளுநர் மேஜர் நிர்பய் சர்மா பேசுகையில், முன்னேற்ற பாதையில் செல்வதற்கு  வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளில் தெளிவான நோக்கம் மற்றும் சீரிய பார்வை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தப் பகுதியின் எதிர்கால வளர்ச்சி சாத்தியமாவதற்கு சீரிய பார்வை, சரியான நடவடிக்கை இவற்றுடன் தெளிவான காலத்திட்டம் குறிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். வட கிழக்கு மாநிலங்களின் திருவிழாக்களை நாட்டின் பிற பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்யும்போது பிறர் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும், அதேபோன்று மற்றவை இங்கு அறிமுகப்படுத்த வேண்டும். வட கிழக்கு மாநிலங்களின் இணைப்பை வலுப்படுத்தும் தேவை இருக்கிறது. அதேபோன்று வட கிழக்கு மாநிலங்கள் அண்டை நாடுகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும், இது வட கிழக்கு மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும். அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் அரசு மட்டுமே தனியே மேற்கொள்ள முடியாது என்பதால், தனியார்களும் பங்கேற்க வேண்டிய சூழல் கனிந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் வடகிழக்கு மாநில இணைப்புக்கு, டிஜிட்டல் மற்றும் ஆகாய மார்க்க இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக மிசோரம் மாநிலமானது, பல்லுயிர் நிரம்பப்பெற்றது என்ற தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும். இன்றைய புதிய பொருளாதார கொள்கையானது, தொழிலதிபர்களுக்கு இடைஞ்சலாக இருந்த நிலச்சட்டத்தின் பல்வேறு தடைகளை தீர்க்க முயற்சித்துள்ளது. வடகிழக்கு குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டு, அனைத்து பயனாளிகளையும் பங்குபெறச் செய்து ஓர் ஆண்டுக்கு எடுக்கவேண்டிய திட்டம் தீட்டப்பட்டு, அதனை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மணிப்பூர் அரசின் கைத்தறி, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஹெ.பிஸ்வஜித் தெரிவிக்கையில், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மணிப்பூர் திகழ்கிறது. இந்த மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். 2019-ம் ஆண்டுக்குள் இம்பால் நகருக்கு ரயில் போக்குவரத்து இணைப்பு முடிவடைந்துவிடும் என்றும், கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் நிறைய சாத்தியங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.நவீண் வர்மா, இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படுபவை வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்றியமையானவை. வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு ஏராளமான முயற்சிகள் செய்துவருவதாக குறிப்பிட்டார். இந்தப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் சம்பதா எனப்படும் விவசாய பொருட்கள் பதப்படுத்தும் மத்திய அரசு திட்டத்திற்கும் வடகிழக்கு கவுன்சில் ஆதரவு கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். வடகிழக்கு சுற்றுலா மேம்பாட்டு கழகமானது வடக்கு மற்றும் கிழக்க மாநில சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் ஊக்குவிக்கிறது. அதேபோன்று இயற்கை விவசாயம், மருத்துவ சுற்றுலா, எல்லைப் பிராந்திய மதிப்பு மாற்று, உள்கட்டுமான மேம்பாடு போன்றவை சிறந்த வகையில் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாகவும், வடகிழக்கு பிராந்தியம் எனப்படும் சொர்க்க பூமி இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

கிழக்கு செயலாளர் திருமதி பிரீதி சரண் பேசுகையில், வட கிழக்கு பிராந்தியங்கள், அரசாங்கத்தின் கிழக்கு கொள்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வலிமையான, உறுதியான வட கிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் பாலமாக விளங்குகின்றன. வட கிழக்கு பிராந்தியங்களில் உப பிராந்திய வணிகம் மற்றும் இணைப்புகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மிகவும் விரிவாக எடுத்துரைத்தார். தற்போது வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியஆசிய தொடர்பு மற்றும் வணிக மாநாடுகளை நடத்திவரும் சூழலில், வட கிழக்கு பிராந்தியங்கள் இந்த இணைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஆர்.சிதம்பரம் பேசுகையில், வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாடு அமைச்சகமானது, வட கிழக்கு பகுதியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை புகுத்துகிறது. தெற்கு, கிழக்கு பகுதிகளில் பண்ணை மற்றும் பண்ணையல்லாத துறைகளில் இந்த அறிவியல், தொழில்நுட்பம் அவசியப்படுகிறது என்று தெரிவித்தார். எந்தெந்த இடங்களில் எல்லாம் தொழில்நுட்பம் புகுத்த வேண்டியுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், இந்த பிராந்தியத்தை முன்னேற்றுவது நமது அத்தனை பேரின் கடமையும் ஆகும் என்று தெரிவித்தார்.

.சி.சி. வட கிழக்கு பிராந்திய கமிட்டியின் இணை தலைவர் திரு.பி.கே.பெஸ்போரஹ் பேசுகையில், இந்த பிராந்தியத்தில் விவசாயப் பொருட்கள் நிரம்பியுள்ளன ஆனால் விவசாய சந்தை, தேவையைவிட மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் சுற்றுச்சுழலுக்கு எந்த பாதிப்பும் நேராத வகையில் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் வளர்ச்சி இருக்க வேன்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், பிராந்தியத்தில் வடக்கு மற்றும் கிழக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் இடம் பிடித்தது. பிராந்திய வான்வெளி இணைப்பு, சிந்து நதி நீர் ஒப்பந்தம், சாலை மற்றும் நெடுஞ்சாலை, வடகிழக்கு பிராந்தியத்தில் திறன் மேம்பாடு, சேவைத் துறையில் நிதி, வடகிழக்குப் பிராந்தியத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி, இயற்கை விவசாயம், தரமான விதைகள்,சுற்றுலா மற்றும் விருந்தோபல் போன்றவை குறித்தும் விவாதம் நடத்தப்பட்டன.

*****



(Release ID: 1511368) Visitor Counter : 364


Read this release in: English