குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெற பழங்குடியினர் வளர்ச்சி மிக முக்கியம் : குடியரசுத் துணை தலைவர்
மிகப்பெரிய தேசிய பழங்குடியினர் விழாவான “ஆடி மாகா உற்சவத்தினை” துவக்கி வைத்தார்
Posted On:
16 NOV 2017 8:45PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெற பழங்குடியினர் வளர்ச்சி மிக முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு. வெங்கையா நாயுடு கூறியுள்ளார். மிகப்பெரிய தேசிய பழங்குடியினர் விழாவான “ஆடி மாகா உற்சவ” துவக்க விழாவில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். இன்று தொடங்கிய இந்த விழா இந்த முறை “பழங்குடியினர் கலாச்சாரம், உணவு மற்றும் வர்த்தகம் அக்கியற்றின் சக்தியை கொண்டாடுவோம்” என்ற கருப்பொருளை கொண்டு நடைபெறுகிறது.
இந்த விழா இன்று முதல் தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெறும். மத்திய பழங்குடியினர் நலன் துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓராம், மத்திய பழங்குடியினர் நலத் துறை இணை அமைச்சர் திரு.சுதர்சன் பகத், மத்திய பழங்குடியினர் நலன் துறை அமைச்சக செயலர் லீனா நாயர், டிரைபெட் நிர்வாக இயக்குநர் திரு. பிரவிர் கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த அற்புதமான கலாச்சார பாரம்பரியத்தை அனைத்து இந்தியாவிற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்த இந்த விழா மிகவும் உபயோகமுள்ளதாக அமையும் என்று குடியரசுத் துணை தலைவர் கூறினார். மேலும், பழன்குடியனரால் செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் கலைப்பொருட்கள் இந்த விழாவில் விற்கப்படுவதினால் இது அவர்களுக்கு பொருளாதார பயனும் அளிக்கும். அவர்களின் செயல்திறனுக்கான பரிசு பொருளாதார செழிப்பு மூலம் வழங்கப்படும்.
பழங்குடியினருக்கு ஏற்படும் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பினை இந்திய அரசியலமைப்பு அரசிடம் ஒப்படைத்துள்ளது. பழங்குடியினரை பிரதான பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைமுறைக்கு அழைத்துவர வேண்டும் அதேசமயம் அவர்கள் காலாச்சாரம் மாறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆதிவாசிகள்தான் தொன்மையானவர்கள். மேலும், அவர்களின் வாழ்க்கை மூலாதார உண்மைகளை, நிலைத்த நன் மதிப்புகள் மற்றும் இயற்கையான எளிமை ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டது என்பதினை குடியரசுத் துணை தலைவர் எடுத்துரைத்தார்.
புகழ்பெற்ற வடிவமைப்பு நிறுவனங்களில் உள்ள முக்கிய வடிவமைப்பாளர்கள் மற்றும் பழன்குடியின கலைஞர்களுக்கு இடையே தொடர்பினை ஊக்குவிக்க அரசு முற்படுகிறது. இதற்கு ஆடி மாகா உற்சவம் போன்ற நிகழ்ச்சிகள் மிக முக்கியமாகும். இதனை அடைவதற்காவே அரசு இந்தியாவின் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பினை (டிரைபெட்) உருவாகியுள்ளது.
இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக மத்திய பழன்குடியனர் நலன் துறை அமைச்சகம் மற்றும் டிரைபெட்டிற்கு குடியரசுத் துணை தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த விழாவினை பயன்படுத்தி மற்ற கலைஞர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் உறவினை ஏற்படுத்திகொள்ளுமாறு பழங்குடி கலைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
*****
(Release ID: 1511344)
Visitor Counter : 211