பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

அனைத்துப் பருப்பு வகைகளையும் ஏற்றுமதி செய்ய அமைச்சரவை அனுமதி

Posted On: 16 NOV 2017 3:42PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு, அனைத்து வகையான பருப்புகளையும் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதற்கான அதிக வாய்ப்பையும், தங்களுடைய உற்பத்திக்குச் சிறந்த பலன்களைப் பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

பருப்பு வகைகளுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான அதிகாரத்தைபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் ( டிஎஃப்பிடி ) செயலாளர் தலைமையில் இயங்கும் குழு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர்கள் ( டிஓசி ), வேளாண்மை, கூட்டுறவுவிவசாயிகள் நலத்துறைச் செயலாளர்கள் ( டிஏசி&எஃப்டபிள்யூ ), வருவாய்த் துறை ( டிஓஆர் ), நுகர்வோர் விவகாரத்துறை ( டிஓசிஏ ), வெளிநாட்டு வாணிக இயக்ககம்  ( டிஜிஎஃப்டி ) ஆகிய துறைகளின் செயலாளர்களை உள்ளடக்கியோருக்கும் அளித்துள்ளது. மேலும் அளவுரீதியான கட்டுப்பாடுகள், முன்பதிவு , உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவை, உள்நாட்டு மற்றும் சர்வதேச விலைகள், சர்வதேச வியாபார அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்து இறக்குமதி வரியில் மாற்றம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

அனைத்து வகையான பருப்பு வகைகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதித்திருப்பது, விவசாயிகள் தங்கள்  உற்பத்திகளை உரிய விலையில் விற்பதற்கு உதவும் என்பதுடன், விதைத்தலை விரிவாகச் செய்வதற்கும் ஊக்கமளிக்கும். பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வது, பருப்பு வகைகளின் உபரி உற்பத்திக்கான ஒரு மாற்றுச் சந்தையை வழங்கும். பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது, நமது நாட்டு மக்களும் ஏற்றுமதியாளர்களும் தமது சந்தை வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கு உதவும்.

நமது நாட்டின் பருப்பு உற்பத்தி தக்கவைக்கப்படுவதோடு, பருப்பு இறக்குமதியை நாம் சார்ந்திருப்பதைக் கணிசமான அளவுக்குக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களுக்கு அதிக அளவில் புரதச்சத்தை வழங்கவும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பை நோக்கி நம்மைச் செயல்படுத்தவும் கூடும். உலகளாவிய உணவு வழங்கல் சங்கிலியுடன் ஒருங்கிணைக்கப்படுவது, நமது விவசாயிகள் நல்ல வேளாண்மை நடைமுறைகளைப் பின்பற்றிச் சிறந்த விளைச்சலைப் பெறவும் உதவக் கூடும்.

2016 -2017 உற்பத்தி ஆண்டில், இந்திய விவசாயிகள் 23 மில்லியன் டன்கள் பருப்பு வகைகளை விளைவித்து, இந்தியாவின் பருப்பு இறக்குமதிச் சார்பைக் குறைத்துக் கொள்ளும் சவாலை எதிர்கொண்டு வாழ்ந்துள்ளனர். நமது விவசாயிகள் அதிக அளவில் பருப்பு உற்பத்தி செய்வதைத் தக்கவைக்க அரசு பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது சந்தை விலை, இவற்றில் எது அதிகமானதோ, அதை அளித்து அரசு 20 லட்சம் டன்கள் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்துள்ளது. இது, இதுவரைஇல்லாத அளவு பருப்புக் கொள்முதல் ஆகும்.

 

பின்புலம் :

2016 – 17 ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமானதாக, மிகவும் ஊக்கமூட்டும் வகையில் உள்ளது. பருப்பு வகைகளுக்கு   அரசுவிவசாயிகளின் மனதைக் கவரும்  குறைந்தபட்ச ஆதரவு விலையை ( எம்எஸ்பி ) அளித்தும் பருப்பினை      20 லட்சம் அளவுக்குப் பொதுக் கொள்முதல் செய்தும் அரசு ஆதரவு அளித்துள்ளது.    2016 – 17 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பருப்பு உற்பத்தி  22.95 மில்லியன் டன்களாக இருந்தது. கொண்டைக்கடலை ( சன்னா ) உற்பத்தி 9.33 மில்லியன் டன்களாக இருந்தது. 2015 – 16 ஆம் ஆண்டின் 7.06 மில்லியன் டன்கள் உற்பத்தியுடன் ஒப்பிட்டால், 32 % அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. இதர ரபி பருப்பு வகைகளின்ரபி பருப்பு வகைகளான மசூர் பருப்பு. – துவரைமுதலியன உட்பட ) உற்பத்தியானது 2016 – 17 ஆம் ஆண்டில் 3.02 மில்லியன் டன்களாக இருந்தது. இது 2015 – 16 ஆம் ஆண்டின் உற்பத்தியான 2.47  மில்லியன் டன்களுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. 2017 – 18 ஆண்டிற்கான பருப்பு உற்பத்தி 22.90  மில்லியன் டன்கள் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

********



(Release ID: 1511342) Visitor Counter : 249


Read this release in: English