ரெயில்வே அமைச்சகம்

மின்சாரக் கட்டணத்தில் இந்திய ரயில்வே சிறப்பான சேமிப்பு நிகழ்த்தியுள்ளது

ஏப்ரல் 2015 முதல் அக்டோபர் 2017 வரையிலுமான ஒட்டுமொத்த சேமிப்பு ரூ.5,636 கோடியைத் தொட்டது.
10 ஆண்டுகளில் (2015 – 2025) ஒட்டுமொத்த சேமிப்பு ரூ.41,000 கோடியாக இருக்கும்.
புதுமையான உபாயமாக, பொது அணுகல் முறையில் மின்சாரக் கொள்முதல் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
பொது அணுகல் முறை மின்சாரக் கொள்முதல் மூலம் 7 மாநிலங்களான, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா மற்றும் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் 5 மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், ரயில்வே பொது அணுகல் வழியில் மின்சாரம் பெறுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அடுத்த வருடம் முதல் இந்த முறை தொடங்கப்படலாம்.
மீதமுள்ள மாநிலங்களிலும் பொது அணுகல் முறையில் மின்சாரம் பயன்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Posted On: 23 NOV 2017 4:03PM by PIB Chennai

மின் இழுவைக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட சிறந்த உபாயத்தின் மூலம் இந்திய ரயில்வே துறை, ஏப்ரல் 2015 முதல் அக்டோபர் 2017 வரை, பொது அணுகல் ஏற்பாடு மூலம், வழக்கமான செயல்பாடுகள் இருந்தபோதும் ஒட்டுமொத்தமாக ரூ.5,636 கோடி சேமித்துள்ளது. இந்த நிதியாண்டு முடிவதற்குள் அதாவது மார்ச் 2018க்குள், இந்த ஒட்டுமொத்த சேமிப்புத் தொகை ரூ.6,927 கோடியாகவும், அதாவது எதிர்பாக்கப்பட்ட இலக்கைவிட 1,000 கோடி அதிகம் சேமிக்கப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் (2015-25) ஒட்டுமொத்த மின் இழுவைக் கட்டணத்தில் ரூ.41,000 கோடி சேமிக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு, இந்திய ரயில்வேக்கு 41ஆயிரம் கோடி இலக்கு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிக அதிகமாக இருந்த மின்சாரக் கட்டணத்தில், இந்திய ரயில்வே பொது அணுகல் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு புதுமையான முயற்சி மேற்கொண்டது. இதற்காக, இந்திய ரயில்வேக்கு நிகர்நிலை உரிம நிலையை, மின்சார சட்டம் 2003 கொடுத்துள்ளது.

இந்தியாவுக்கு மின்சாரம் வந்த காலத்தில் இருந்து, இந்தியன் ரயில்வேயிடம் உற்பத்தி ஆர்வம், பரிமாற்றம் மற்றும் மின்சார விநியோகம் போன்றவை இருந்தன. ஆனாலும், மின்சார சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர இந்தியன் ரயில்வே தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், பல்வேறு காரணங்களால் முழுமையடைவதற்கான நேரம் நெருங்கவில்லை. அதன்பிறகு ரயில்வே துறை அமைச்சர்கள், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற புதுமையான உத்வேகத்துடன், சரியான உபாயத்துடன் திட்டமிட்டனர். இந்தியன் ரயில்வேயானது, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அணுகியது. திட்டத்திற்கு ஏற்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அனைத்து மாநில பரிமாற்ற உள்கட்டமைப்புகள் மற்றும் மாநில மின் கடத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, இந்திய ரயில்வே பொது அணுகல் வழிமுறையில் தற்போதுள்ள பரிமாற்ற வழித்தடத்தில் நிகர்நிலை உரிமத்துடன் செயலாற்றுகிறது.



(Release ID: 1511328) Visitor Counter : 64


Read this release in: English