பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

திவால், வாராக்கடன் விதி 2016 சட்டத் திருத்தத்திற்கு அவசர சட்டம்

சட்டவிதிகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் வேண்டுமென்றே தவறு செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அவசர சட்டம் நிறைவேற்றப்படுகிறது

Posted On: 23 NOV 2017 4:00PM by PIB Chennai

வங்கிகளின் வாராக்கடன் மற்றும் திவால் சட்டம் 2016ல் திருத்தம் மேற்கொள்ளும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சட்டவிதிகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் வேண்டுமென்றே தவறு செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக அவசர சட்டம் நிறைவேற்றப்படுகிறது. செயல்படாத சொத்துக்கள் மீதான கடனை திரும்பச் செலுத்துவதற்கு போதிய வசதி இருந்தும், கடனை செலுத்தாத கடன்தாரர், இணக்கம் இல்லாத சூழலை உருவாக்கி நிறுவனம் திவால் ஆனதாக கலைப்பதில் வெற்றிகரமாக தீர்மானம் நிறைவேற்றும் நபர்களை இந்த சட்டம் தடுத்து நிறுத்துகிறது. தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் நிறுவனத்தை கலைக்கும் நடவடிக்கைகளில் இருந்து குறிப்பிட்ட நபர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். மேலும், இந்தத் தீர்மானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, கடன் வழங்குவோர் குழு தேவையான ஆய்வு நடத்துவதற்கும், சாத்தியங்களை ஆராயவும் வழி வகுக்கிறது. இந்தியாவின் திவால் மற்றும் வாராக்கடன் வாரியத்திற்கும் (IBBI)  கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இந்தியன் திவால் மற்றும் வாராக்கடன் வாரிய ஒழுங்குமுறை விதிகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்படி, தீர்மானத் திட்டத்தின் முந்தைய நிலை, முன்னுரிமை தகவல்கள், குறைக்கப்பட்ட மதிப்பீடு அல்லது மோசடி பரிவர்த்தனைகள் போன்ற அனைத்தும் கடன் வழங்குவோர் குழு முன்பு பட்டியலிடப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

பணம் செலுத்தாத நிறுவனங்கள், நிதிகளை பெருநிறுவன கட்டமைப்புகளுக்கு திசை திருப்புவதைக் கட்டுப்படுத்துவது, வங்கித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதுஅரசு அறிமுகப்படுத்தும் சீர்திருத்தத்தை முன்னிட்டு ஏதேனும் ஒரு துறையை பாதிப்பின்றி அகற்றுதல் போன்றவை மீது நடவடிக்கை எடுக்கவும் கூடுதலாக வழிவகுக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் பொருளாதாரம் வலுவடையவும், நேர்மையான வியாபாரிகளை ஊக்குவிக்கவும், தொழில் முனைவோருக்கு நம்பிக்கையூட்டும் சூழலை உருவாக்கவும் உதவும்.

பிரிவு 2, 5, 25, 30 மற்றும் 240 ஆகிய விதிகளில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுபுதிய பிரிவு 29ஏ மற்றும் 235ஏ விதிகள் நுழைக்கப்பட்டுள்ளன.



(Release ID: 1511327) Visitor Counter : 140


Read this release in: English