உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நாளை மாநிலங்களுக்கு இடையேயான மன்றத்தின் 12வது நிலைக்குழு கூட்டம்
மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்த புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் விவாதிக்கபடும்
Posted On:
24 NOV 2017 11:18AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மாநிலங்களுக்கு இடையேயான மன்றத்தின் 12வது நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமை நடக்கும் இந்த நிலைக்குழுவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ், மத்திய நிதி, கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. அருண் ஜேட்லி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைத்தல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு. தாவார் சந்த் கேலாட் மற்றும் ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் உறுப்பினர்களாக பங்கேற்பர்.
மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்த புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கபடும்.
மாநிலங்களுக்கு இடையேயான மன்றத்தின் 11வது நிலைக்குழு கூட்டம் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் ஏப்ரில் 9ஆம் தேதி நடைபெற்றது.
ஒரே ஆண்டில் இரண்டு நிலைக் குழு கூட்டம் நடைபெறுவது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே உள்ள இணக்கமான உறவினை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. 30 மத்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் ஏழு மாநில அரசுகளின் பிரதிநிகளுக்கு இந்த குழு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகளுடன் மத்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகளையும் இந்த கூட்டத்தில் விவாதித்து, நிலைக்குழு தனது இறுதி பரிந்துரைகளை வெளியிடும்.
*****
(Release ID: 1511326)
Visitor Counter : 218