நிதி அமைச்சகம்

“முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி என்கிற கட்டுக்கதை” - மத்திய நிதி அமைச்சரின் கட்டுரை

Posted On: 28 NOV 2017 6:49PM by PIB Chennai

கடந்த சில தினங்களாக முதலாளிகளுக்கு வங்கிகள் அளித்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக பொய்யான வதந்திகள் வெளிவந்தன. இந்த வகையில் உண்மைகளை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது.

     2008 முதல் 2014 வரை பொதுத்துறை வங்கிகள் மிகப் பல தொழில் அதிபர்களுக்கு விகிதாச்சார அடிப்படையின்றி கடன்களை வழங்கி இருந்தன. இத்தகைய கடன்கள் எவரது சார்பில், எவரது நிர்பந்தத்தின் பெயரில் வழங்கப்பட்டன என்பதை பொதுமக்கள் வதந்திகளை பரப்பியவர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு கடன் பெற்றவர்கள் தங்களது கடன்களையும் அதற்கான வட்டியையும் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பிச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்ப்பட்ட போது அப்போதைய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் அவர்களிடம் கேட்க வேண்டும்.

     இத்தகைய கடன்களை பெற்றவர்கள் தொடர்பாக உறுதியான முடிவை எடுப்பதற்கு பதிலாக அப்போதைய அரசு கடன்களை வகைப்படுத்தும் முறைகளின் நெறிகளை தளர்த்தி திரும்பச் செலுத்தாதவர்களை செயல்படாத சொத்துகள் அல்லாத கணக்கு வைத்திருப்போர் என்ற பட்டியலில் சேர்த்தது. இத்தகைய கடன்கள் இதனால் சீரமைக்கப்பட்டன; இதனை அடுத்து வங்கிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் மறைக்கப்பட்டது. வங்கிகள் இத்தகைய கடனாளிகளுக்கு மீண்டும் மீண்டும் கடன்களை வழங்கி இந்த கடன்கள் தொடர்ந்து நிலைத்திருக்க செய்தன.

     இந்த விரும்பத்தகாத தொடர்பினை அறிந்துக்கொண்ட தற்போதைய அரசு கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் தொடர்பாக உறுதியான முடிவுகளை மேற்கொண்டது. நொடித்துப்போதல் மற்றும் திவால் நெறிமுறைகள் இயற்றப்பட்டன; இந்த நெறிமுறைகளை திருத்தி அமைத்து வங்கிகளுக்கு கடன் பணத்தை திரும்ப செலுத்தாத கம்பெனிகள் விஷயத்தில் சம்மந்தப்பட்ட கடன்தாரர்கள் இத்தகைய கம்பெனிகளின் வர்த்தகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதே சமயம் சம்மந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான மூலதனம் வழங்கப்பட்டு அவைகள் வலுப்பெற்று தேச மேம்பாட்டுக்கு பங்களிக்கும் திறன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வங்கிகளுக்கு மூலதனம் அளிக்கப்பட்டதற்கு காரணம், இவை பணத் தேவைக்காக நொந்துபோய் விடுவதற்கு பதிலாக மீண்டும் வலுப்பெற்றவையாக மாறக் கூடும் என்பதே ஆகும். பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் வழங்கப்படுவது கடந்த காலத்திலும் நடந்துள்ள ஒன்றாகும். 2010-11 முதல் 2013-14 வரையிலும் கூட, அரசு, வங்கிகளுக்கு மறு மூலதனமாக ரூ.44,000 கோடியை வழங்கியுள்ளது. இந்த தொகையும் முதலாளிகளின் கடன் தள்ளுபடிக்காகவா?.

    

 

 

 

தீவிரக் கடன் வழங்குதல் பாரம்பரியம்:

2008 முதல் 2016 வரையிலான தீவிரக் கடன் வழங்குதல் காலத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த முன்பணம் ரூ.34,00,000 கோடியாக உயர்ந்தது. இந்த தொகை மீதான திரும்ப செலுத்துகை, முறையாக இல்லாத நிலையிலும் கடன்களின் வகைப்படுத்துதலை தளர்த்தியதின் மூலம், கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் தொடர்ந்து செயல்படா சொத்துகள் அல்லாத கணக்கு வைத்திருப்போர் என்று மாற்றியமைத்தது. இந்த நடவடிக்கை மூலம் வங்கிகளின் நஷ்டங்கள் மற்றும் அவற்றின் நிலையற்ற தன்மை ஆகியன மூடி மறைக்கப்பட்டன.

 

http://pibphoto.nic.in/documents/rlink/2017/nov/i2017112810.png

   

கடன் தள்ளுபடி இல்லை

முன்பு குறிப்பிட்ட பெரிய செயல்படா சொத்து சம்மந்தப்பட்ட திரும்ப செலுத்தாதவர்கள், கடன்கள் எதையும் அரசு தள்ளுபடி செய்யவில்லை. மாறாக, புதிய நொடித்தல் மற்றும் திவால் நெறிமுறைகளின்படி தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ரூ.1,75,000 கோடி சம்மந்தப்பட்ட செயல்படா சொத்துகளில் 12 மிகப்பெரிய கடன் செலுத்தாதவர்களிடமிருந்து 6 முதல் 9 மாத காலத்தில் காலக்கெடுவுடன் வசூலிப்பதற்கான வழக்குகள் ஆகும் இவை. இந்த வழக்குகள் தற்போது பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

வேண்டுமென்றே கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் மீது தடைவிதிப்பு:

தேசிய கம்பெனி சட்ட நடுவர் மன்ற நடைமுறைகளில் வேண்டுமென்றே கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் மற்றும் செயல்படா சொத்து கணக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்கள் பங்கேற்க இயலாமல் அரசு தடை விதித்துள்ளது. சட்ட நடைமுறையை எவரும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தின் மூலம் அரசு இந்த தடையை விதித்துள்ளது. நாட்டில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ள இத்தகைய நடவடிக்கை மூலம் வேண்டுமென்றே வங்கி கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் தங்கள் கம்பெனியின் வர்த்தக நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்து அவர்களிடமிருந்து கடன் தொகையை காலக்கெடுவுடன் திரும்ப வசூலிக்கும். தூய்மையான திறன்பட்ட அமைப்பு முறையை அரசு கொண்டுவந்துள்ளது.  

பொதுத்துறை வங்கிகளுக்கு, முன்எப்போதும் இல்லாத மூலதனம் வழங்குதல்:

கடன்கள் பெறப்படுவதை அதிகரித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் வழங்கும் பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டின் அதிகபட்ச ஓதுக்கீடாக ரூ.2,11,000 கோடி மூலதன உயர்வு அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். இந்த தொகை ரூ.1,35,000 கோடி மதிப்பிலான மறு மூலதன பத்திரங்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்படும். ரூ.18,139 கோடி பட்ஜட் ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும். எஞ்சிய மூலதன தொகை (ரூ.58,000 கோடி என மதிப்பிடப்பட்ட) பங்குச் சந்தையிலிருந்து பெறப்படும். அரசின் பங்குகள் எண்ணிக்கையை குறைத்து கொள்வதன் மூலம் இத்தொகை பெறப்படும். இந்த மூலதன தொகைகள் மூலம் செயல்படா சொத்துகள் காரணமாக வலுவிழந்த வங்கிகள் மீண்டு வலுப்பெற்று பங்குச்சந்தையிலிருந்து போதுமான மூலதனத்தை திரட்டும் நிலையை பெற்றுவிடும். இந்த மூலதனத்தை பெறுவதற்கு வங்கிகள் இத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

நேர்மையான வர்த்தகர்களுக்கு கடன் உதவி:

கடந்த மூன்ற ஆண்டு காலமாக அரசு மேற்கொண்டுள்ள  இந்த வலுவான நடவடிக்கைகள் மூலம் முந்தைய அரசிடமிருந்து பெறப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்படுவதுடன் பொதுத்துறை வங்கிகளின் வலுவை உயர்த்தும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகம் ஏற்பட்டுள்ளது. வலுவான, பெரிய வங்கிகள் உருவாக்கும் நடைமுறை, பாரத ஸ்டேட் வங்கியை ஒருங்கிணைத்தன் மூலம் தொடங்கியது தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மறு மூலதனம் இந்த நடைமுறையை துரிதப்படுத்தும். வலுவான, சீர்திருத்தி அமைக்கப்பட்ட வங்கிகளிலிருந்து நேர்மையான வர்த்தகங்கள் எளிதாக கடன் பெறுவது உறுதி செய்யப்படும் அதே சமயம் அரசு தொடங்கியுள்ள ஒட்டுமொத்த தூய்மைப்படுத்தும் நடவடிக்கையும் தெளிவான கடுமையான சட்டமும் தூய்மையான வங்கி முறையை நாட்டில் உருவாக்கும் என நம்பலாம்.  

*****



(Release ID: 1511254) Visitor Counter : 196


Read this release in: English