குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பஞ்சாயத்துகளைப் போன்று நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நீட்டிப்பது அவசியம்: குடியரசு துணைத் தலைவர்

இந்திய தொழில் வர்த்தகசபைகள் இணையம் - ஃபிக்கி பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ’ புதிய இந்தியாவை நிர்மானிப்போம் ’ நிகழ்வில் உரை

Posted On: 04 NOV 2017 7:18PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரின் முழுமையான உரை கீழ்வருமாறு;-

     “பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மாற்றத்தின் முகவர்களாக மாற முயற்சி செய்யும் உங்கள் அனைவருடன் ’புதிய இந்தியாவை நிர்மாணிப்போம்’ என்பது பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்க்சியடைகிறேன். ஃபிக்கி பெண்கள் அமைப்பு சொந்தமாக செயல்படுகிறது என்பதையம் பெண்களுக்கு குறிப்பாக விளிம்புநிலைப் பிரிவிலிருந்து வருவோருக்கு அதிகாரமளிக்கும் பல்வேறு முன் முயற்சிகளில் தெலங்கானா அரசுடன் பங்கு பெறுவதையும் அறிந்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன்

     மாபெரும் பொருளாதார சக்தியாக மாற்றம் பெறுவதில் தொடக்க நிலையில் இந்தியா இப்போது இருக்கிறது. மாற்றம் பெறும் நடைமுறையைத் துரிதப்படுத்த இந்தியர்கள் அனைவரும் புதிய உத்வேகத்தோடு பணியாற்ற வேண்டியுள்ளது. புதிய இந்தியாவை, மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். ஆம்பேத்கர், பண்டிட் தின் தயாள் உபாத்யாயா மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலர் கனவு கண்ட இந்தியாவை – நிர்மாணிக்க உறுதியேற்க வேண்டியுள்ளது.

     நண்பர்களே, ’சல்தாஹை’ எனப்படும் ஏதோ நடக்கிறது என்கிற அணுகுமுறையை நாம் வெகு காலத்திற்கு ஏற்க முடியாது. அல்லது தீர்மானிக்கப்பட்டது நடத்துவிடும் என்ற அசட்டைத் தனத்தையும் நம்மைச் சுற்றிலும் நடக்கும் எஞ்சிய நிகழ்வுகள் பற்றி கருத்தற்ற நிலைமையும் ஏற்க இயலாது. தேசத்தந்தை கூறிய புகழ்மிக்க வார்த்தைகள் இவை:  “நீங்கற் காண விரும்பும் மாற்றம் நடக்கும்” அதற்கு ஒவ்வொரு தனி நபரும் தங்கள் நிலைக்கேற்ப பாடுபட வேண்டும். அவர்கள் குடும்பப் பெண்ணாகவோ, அரும்பும் தொழில் முனைவோராகவோ, ஒரு தொழிலாளியாகவோ இருக்கலாம். அவர்கள் பாலினப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சிசுக் கொலை, ஊட்டச்சத்து குறைபாடு. ஊழல், சாதியம், மதவாதம், எழுத்தறிவின்மை போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துத் தீவிரமாகப் போராட வேண்டும். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பயங்கரவாதம் ஆகும்.

     எல்லாப் பிரச்சினையும் அரசால் தீர்க்கப்படவேண்டும்;  தனிநபரோ சமூகமோ எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற வித்தியாசமான மனப்போக்கு அல்லது நம்பிக்கை பல ஆண்டுகளாக இந்தியர்களாகிய நம்மில் உருவாகியுள்ளது. எல்லாம் அரசே செய்யும்; நாம் சும்மா உட்கார்ந்து இருப்போம் (“சப்குச் சர்க்கார் கரேகா, ஹம்பேக்கர் பைட்டேகா“) – இந்த எண்ணத்தில் மாற்றம் வர வேண்டும் இந்தியாவின் முழுவளமும் பயன்படுத்தப் படுவதற்கு ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

     இது நடப்பதற்கு, கனவுகாணும் புதிய இந்தியா வடிவம் பெறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக நாட்டின் மக்கள் தொகையில் பாதியளவாக இருக்கிற இளைஞர்களும் பெண்களும் முன்னிணியில் இருக்க வேண்டும்.

     புதிய இந்தியா என்பது முழுமையான எழுத்தறிவு பெற்றதாக, ஊழலற்றதாக, ஒவ்வொரு குடும்பமும் வீடு பெற்றதாக, தேவைப்படும் போதெல்லாம் மின்சாரம் கிடைப்பதாக, சிறந்த சுகாதார வசதி உடையதாக, இளைஞர்களின் விருப்பத்திற்கேற்றதாக, விவசாயிகளின் வருவாய் இரு மடங்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பத்துடன் பொருளார சக்தி மிக்கதாக இந்தியாவை மாற்ற வேண்டும். விவசாயமும் தொழில் துறைகளும் அதன் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகிறது. அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தங்களின் நடத்தை வழி முன் மாதிரிகளாக இருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.

     நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தும், நமது தொன்மை இலக்கியங்களிலும் பெண்களுக்கு அதிகாரத்தில் உரிய நிலைகளும் தலைமைத்துவமும் தரப்பட்டுள்ளது. நமது சமூகப் பொதுப் பண்பிலும் நெறி முறைகளிலும் பெண்கள் எப்போதும் மதிக்கப்பட்டுள்ளனர். நவீன காலத்தில் அருவருக்கத்தக்க கொடிய போக்குகள் உருவாகியிருப்பது துரதிருஷ்டவசமானது. பெண்களுக்கு எதிராகக் கொடுஞ் செயல் புரியும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்பத் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்;  “ஒரு தேசத்தின் முன்னேற்றத்தை அளப்பதற்கான கருவி பெண்களை அது நடத்தும் விதம் தான்.“ “யத்ரா நாரியஸ்து புஜயந்தே, ரமந்த்தா தத்ரா தேவதா“ என்று நமது தொன்மை இலக்கியங்கள் கூறுகின்றன. இதன் பொருள், பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ கடவுள்கள் அங்கே வாழ்வர் என்பதாகும்.

     விண்வெளியிலிருந்து விளையாட்டுக்கள் வரை பல துறைகளிலும் பிரமாண்டமான வெற்றிகளைப் பெண்கள் பெற்றுள்ள போதும் பெண்களின் ஒட்டுமொத்த அதிகாரமளித்தலில் அரசியல் அதிகாரமளித்தல் தான் மிக முக்கியமான அம்சமாகும். வரும் ஆண்டுகளில் பஞ்சாயத்துக்கள் முதல் நாடாளுமன்றம் வரை பல்வேறு அமைப்புகளில் மேலும் கூடுதலான பெண்களைக் காண  முடியும் என்று நான் நம்புகிறேன். பெண்களுக்கு சமூக – பொருளாதார அதிகாரமளித்தல் பாதையில் ஏற்படும் அனைத்துத் தடைகளையும் அகற்றுவதும் அவசியமாகும். பஞ்சாயத்துக்கள் போன்றே நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களக்கான இட ஒதுக்கீட்டை நாம் நீடிப்பது அவசியமாகும்.

     சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அதிகாரமளிப்பதற்கு கல்வி அடித்தளம் அமைக்கிறது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. மிகப்பொருத்தமாக சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு பெண்ணுக்குக் கல்வியளிப்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கே கல்வியளிப்பதாகும். பாலினப்பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல், பாதுகாப்பை உறுதிசெய்தல், உடல் நலம் பேணுதல். தொழில் திறன்களை வளர்த்தல், கூடுதலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பாதுகாப்பான பணியிடங்களை உறுதி செய்தல் என்பவையெல்லாம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலின் நோக்கங்களாகும். இதனை பெண்களுக்குக் கல்வி அளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்த 219 நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல் அடிப்படையிலான ஐ.நா. அறிக்கை கூறுகிறது. பெண்கள் கருவுறும் வயதில் கூடுதலாக அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டுக் கல்வியால் குழந்தைகள் மரணம் 9.50 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

     குழந்தைகளிடையே குறைந்து வரும் பாலின விகிதாசாரத்தை தலை கீழாக மாற்றுவதற்கு பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம், என்பது உள்ளிட்ட பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.

     பெண்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவிலிருந்து வந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மேலேற்றிவிடவும் ஃபிக்கி பெண்கள் அமைப்பின் (எஃப்எல்ஓ) ஐதராபாத் பிரிவு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் ஒட்டுநர்களாகவும், தையல்காரர்களாகவும், பள்ளிகளில் பாதுகாப்புப் பணியாளர்களாகவும் பயிற்சி அளிக்கும் எஃப் எல் ஓ செயல் பாட்டை நான் பாராட்டுகிறேன்.

     தொழில் முனைவோராகும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும் வழிகாட்டவுமான எஃப்எல் ஓ வின் ’ஸ்வயம்’ என்ற திட்டம் பாராட்டுக்குரியது.

     இறுதியாக, ஒருவரையும் பின்தங்கி விட்டுச்செல்லாத, ஒவ்வொரு இந்தியனின் விருப்பங்களும் கனவுகளும் நிறைவேற்றப்பட்ட, புதிய இந்தியாவை நிர்மாணிக்க, ஒவ்வொரு குடிமகனும் பாடுபடவேண்டும் என அழைப்பு விடுத்து, எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

நன்றி, ஜெய்ஹிந்த்

*****
 



(Release ID: 1511223) Visitor Counter : 468


Read this release in: English