குடியரசுத் தலைவர் செயலகம்
அருணாச்சல் பிரதேஷ் சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வில் குடியரசு தலைவர் உரை
प्रविष्टि तिथि:
19 NOV 2017 6:42PM by PIB Chennai
நவம்பர் 19-ம் தேதி ,இட்டா நகரில் அருணாச்சல் பிரதேஷ் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே உரையாற்றிய குடியரசு தலைவர், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், பொது சேவை புரியவும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். தேர்லுக்குப் பின்னர், தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் உள்பட தொகுதியின் அனைத்து மக்களுக்கும் தாங்கள் பொதுவான பிரதிநிதிகள் என்பதை உறுப்பினர்கள் மறக்கக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் ,அவர்கள் பொது நலன் மற்றும் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்கள் ஆவார்கள். மேம்படுத்தவும் மக்களின் வாழ்க்கையை, பொதுப் பிரச்சினைகளை தீர்க்கவும் ஏற்ற சட்டங்களை இயற்றும் கடமை அவர்களுக்கு உள்ளது. .
நாம் அனைவரும் வளமான கலாச்சாரம் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் குடிமக்கள் என்று குடியரசு தலைவர் கூறினார். இந்தியாவில் உணவு, ஆடை அணிதல், பழக்க வழக்கங்கள், மதப்பாரம்பரியங்கள் ஆகியவற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் இந்த வேறுபாடுதான் நமது பலம். நம்மை ஒன்றுபடுத்தும் அம்சம் ஆகும். திருப்பதி ஆகட்டும், தவாங்கில் உள்ள புத்த மடம் ஆகட்டும் அவை அனைத்தும் நம்மை பெருமைப்படுத்தும் தலங்களாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற அருணாச்சல் பிரதேசின் அனுபவம் நமது நாட்டின் பாரம்பரியத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று குடியரசு தலைவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் பல இனம் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் நல்லிணக்கத்துடன் வசித்து வருகின்றனர்.. இது அனைத்து இந்தியர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
நாட்டின் எல்லை மாநிலமாக அருணாச்சல் பிரதேஷ் இருப்பதால், அண்டை நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் தொழில் புரியும் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று குடியரசு தலைவர் கூறினார். கிழக்கு சார்ந்த கொள்கையின் அடிப்படையில், ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளில் அருணாச்சல் பிரதேஷ் முக்கியத்துவம் வாயந்த மாநிலமாக திகழும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
முன்னதாக, இட்டா நகரில் ,விவேகானந்தா மையத்தின் 40-வது ஆண்டு நிறைவு தினத்தில் அவர் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர், அருணாச்சல் பிரதேசில் கல்வித்துறையில் விவேகானந்தா மையம் சிறப்பான தொண்டாற்றி வருவதாக புகழ்ந்துரைத்தார். விவேகானந்தா மையத்தை சேர்ந்த பள்ளிகளில் குரு- சிஷய பாரம்பரியத்திலான குருகுல முறையை இன்னும் உயிர்ப்போடு பராமரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார். யோகா, பிரணாயாமம், தியானம், சமஸ்கிருதம் போன்றவற்றின் மூலம் கடந்தகால இந்தியக் கலாச்சாரத்தை அவர்கள் பராமரித்து வருவதாக அவர் கூறினார்.
விவேகானந்தா மையப் பள்ளிகள் பாரம்பரிய ஞானத்துடன், நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் கலவையாக திகழ்வது பெருமகிழ்ச்சியை தருகிறது என்று குடியரசு தலைவர் தெரிவித்தார்.
****
(रिलीज़ आईडी: 1511219)
आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English